மேலும் அறிய

பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

Kanchipuram News: தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அறுவை சிகிச்சை இன்றி நுணுக்கமான முறையில் போராடி வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிக்கின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்த அஜித் டயானா தம்பதிகளுக்கு குகனேஷ் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. படு சுட்டியான இந்த ஆண் குழந்தை வீட்டில் தவிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே இருந்த ஒன்றரை இன்ச் சுற்றளவு அகலம் உள்ள பிரபல நிறுவனத்தின் தைல டப்பாவை எடுத்து வாயில் போட்டு உள்ளது. 

வெளியேறிய ரத்தம் - பதறிய பெற்றோர்கள்

அந்த டப்பாவை வெளியே துப்ப தெரியாமல் குழந்தை சிரமப்பட்டு முழுங்க முயன்று உள்ளது. பெரிய சுற்றளவு உள்ள இந்த தைல டப்பா குழந்தையின் தொண்டையில் சென்று பலமாக சிக்கிக் கொண்டது. குழந்தை அழுகையைக் கண்ட பெற்றோர் குழந்தையை தூக்கி என்ன ஏது என கவனித்துக் கொண்டிருந்தபோதே குழந்தையின் வாயிலிருந்து குபு குபுவென ரத்தம் கொட்டியது. குழந்தை உயிருக்கு போராடிய நிலையை கண்ட பெற்றோர்கள் குழந்தையை தூக்கிக் கண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில், உள்ளதை கண்டு சென்னை எக்மோரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பலாம் என திட்டமிட்டனர். அதற்குள் குழந்தை நிலைமை மோசமாக தொடங்கியது.

மருத்துவர் குழு முடிவு

ஆம்புலன்ஸ் வருகின்ற நேரத்துக்குள் குழந்தையின் தொண்டையில் சிக்கிய டப்பாவை எடுக்கலாம் என்ற முடிவுக்கு, மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பாலாஜி மற்றும் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் மணிமாலா ஆகியோர் முடிவு எடுத்து சில வினாடிகள் ஆலோசனை செய்தனர். 

பின்னர் குழந்தையை மென்மையாக தூக்கி பிடித்து "நுணுக்கமாக செயல்பட்டு தொண்டைக்கும் மூச்சு குழலுக்கும் இடையில் பலமாக சிக்கி இருந்த தைல டப்பாவை, குரல்வளை காட்டி என்ற முறையில் போராடி தைல டப்பாவை மிக லாவகமாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

தைல டப்பாவை தொண்டையில் இருந்து எடுத்த பின்னர் குரல் வளைக்கும் தொண்டைக்கும் எந்தவிதமான சேதம் இல்லை, குழந்தையின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று உறுதி ஏற்பட்ட பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்து குழந்தையை கண்காணித்து வருகின்றனர்.

சமீபகாலமாக அரசு தலைமை மருத்துவமனையில் சரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்ற நிலையில், 7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அறுவை சிகிச்சை இன்றி மிக லாவகமாக எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிக்கின்றது.

பெற்றோர்களே உஷார் 

ஏழு மாத ஆண் குழந்தையை தனியே விட்டுவிட்டு கவனக்குறைவாக இருந்த குழந்தையின் பெற்றோர்களால் தான் இது போன்ற ஆபத்தான நிலை குழந்தைகளுக்கு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோன்று பெற்றோர்கள் அலட்சியமாக இருக்காமல், குழந்தைகளுக்கு கண்ணு தெரியும் வரை இது போன்ற பொருட்களை குழந்தைகள் கண்ணுக்கு தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget