Ayodhya Ram Temple: தனியார் கோயிலுக்குள் அறநிலைய துறைக்கு அதிகாரம் கிடையாது - பொங்கி எழுந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்
எல்இடி வைத்து வியாபாரம் செய்பவர்களை மிரட்டினார்கள். நாடு முழுவதும் நல்ல விதமாக ஆனந்தத்துடன் மக்கள் உள்ளனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ராம கீர்த்தனை பஜனைக்காண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வசந்த மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் சிலை வைத்து ராம கீர்த்தனைகள் பஜனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ராம கீர்த்தனை பஜனை விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மக்களுடன் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டு களித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர், அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி காஞ்சிபுரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்திற்கு கீழ் செயல்படும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த அரிதான காட்சியை நேரடி மூலமாக பார்த்தோம். எத்தனை முறை கூறியும் தன்னுடைய, செய்யும் முறை மாற்றிக் கொள்ளாமல் இன்று காலை வரை நாங்கள் இங்கு வரும் வரை நிறைய மக்கள் கஷ்டப்படுத்தினார்கள் என செய்தி வந்து கொண்டுதான் இருந்தது.
ஆனாலும் நான் மனசார சென்னை நீதிமன்றத்திற்கும் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் அதை தான் நினைத்தார்கள்.
இந்து மக்களின் வழிபாடு முறையை, நிலைநிறுத்திய நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாடு முழுவதும் மக்கள் மனதில் இருந்து இதில் பங்கேற்க வேண்டும் என்று ஆவலுடன் பார்த்தார்கள்.
நீதிமன்ற உத்தரவு எத்தனை பேருக்கு நேரடியாக சென்று இதுகுறித்து தகவல் சேர்ந்ததோ இல்லையோ. பலர் பார்க்கும்போது கிடைத்த ஆனந்தத்தை நாங்களும் அனுபவித்தோம். பிரதமர் 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார்.
நாங்கள் நேரடி ஒளிபரப்பை செய்ய மாட்டோம் என பாஜக நிர்வாகி ஒருவர் காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், பிச்சி பிச்சி எப்படி கேள்வி கேட்டாலும், அறநிலையத்துறை என்ன சொன்னார்கள் நாங்கள் அப்படி தடுக்கவில்லை என்று கூறினார்கள். தடுக்குறதாக எழுத்து வடிவமாக அவர்கள் கூறவில்லை. ஆனால் போலீசை வைத்துக் கொண்டு, தடுத்தார்கள்.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தனியார் கோவில், அறநிலை துறைக்கு அதிகாரம் இல்லை. இங்கு கூட அவர்களுடைய ஆதிக்கத்தை காட்ட முயற்சி செய்தார்கள். இங்கு கூட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலே நேரலை செய்யப்பட்டது.
இங்கு நேரலை செய்வதை கூட தடுத்தார்கள். எல்இடி வைத்து வியாபாரம் செய்பவர்களை மிரட்டினார்கள். நாடு முழுவதும் நல்ல விதமாக ஆனந்தத்துடன் மக்கள் உள்ளனர்.
இந்த நாட்டில் இந்து மக்கள் உரிமையை பறிப்பதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி நடந்தால், நியாயமாகவும் நீதிமன்றம் வழியாகவும் நாங்கள் செல்வமே தவிர கல்லை எடுத்துக் கொண்டு அடிப்பது சாலையில் கத்திக் கொண்டு அமர்க்களம் செய்யும் மக்கள் இல்லை. நீதிமன்றம் மூலம் நியாயமாக எங்களுக்கு நீதி கிடைத்தது நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்து விட்டு சென்றார் என்று கூறினார்.