மேலும் அறிய

திமுக GenZ செயற்பாட்டாளர் சரனை சொந்த ஜாமினில் விடுவித்த நீதிமன்றம்..ஜூலி ஆட்டத்தை பாருங்க

த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை நீதிமன்ற ஏற்க மறுத்துள்ளது

தி.மு.க. சமூக வலைதள Gen Z குழுவை சேர்ந்த செயற்பாட்டாளர் சரண் ஜெயராம் (ஆர்ஜே சரண்) மீது தமிழக வெற்றிக் கழகம்  பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், எழும்பூர் நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க மறுத்து, சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து திமுக தங்களது GenZ அணி ஒன்றை தொடங்கியது. இந்த குழு சார்பாக மாவட்டம் தோறும் இளைஞர்களை திரட்டி திமுக ஆட்சியில் சாதனைகளை தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதே நேரம் தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இதனால் தவெக ஆதரவாளர்கள் மற்றும் திமுக GenZ அணிக்கு இடையில் சமூக வலைதளங்களில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரை கடுமையாக வசைபாடுவதும் , மீம்ஸ் வெளியிடுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது

GenZ செயற்பாட்டாளர் சரன் கைது 

கடந்த ஜூன் மாதத்தில் த.வெ.க.வின் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், தனது சமூக வலைதளப் பதிவுகளை சரண் ஜெயராம் அனுமதியின்றி பயன்படுத்தி, பெண்களை அவமதிக்கும் வகையிலும் உருவகேலி செய்யும்  விதமாக வீடியோக்கள் வெளியிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், தன்னை அவதூறாக சித்தரித்ததுடன், மிரட்டும் தொனியிலும் கருத்துகளை பதிவு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துதல், அவதூறு பரப்புதல் மற்றும் மிரட்டல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது சரண் ஜெயராம் சில நாட்கள் தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிலையில், தனிப்படை போலீசார் அவரை தாம்பரம் பகுதியில் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

சொந்த ஜாமின் வழங்கிய நீதிபதி

கைது செய்யப்பட்ட சரனை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைக்க அனுமதி கோரினர். ஆனால், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை முன்னேற்றத்தை பரிசீலித்த நீதிமன்றம் காவல் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அதற்குப் பதிலாக சரண் ஜெயராமை சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய அவர், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாகக் கூறியதுடன், சட்டப்படி எதிர்கொள்வேன் என தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சரனுக்கு பிக்பாஸ் ஜூலி தனது ஆதரவை தெரிவித்து வந்த நிலையில் இன்று சரன் விடுவிக்கப்பட்டதை திமுக GenZ குழுவுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி ; அறுவை சிகிச்சைக்குப் பின் கல்லூரி மாணவி பரிதாப மரணம்
அதிர்ச்சி ; அறுவை சிகிச்சைக்குப் பின் கல்லூரி மாணவி பரிதாப மரணம்
SIR இல்லை என்றால் TVK 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
SIR இல்லை என்றால் TVK 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
நான் நினைச்சிருந்தா கூலிங் கிளாஸ் போட்டு போட்டோ சூட் எடுத்து இருக்கலாம்.. முதல்வரை சீண்டும் இபிஎஸ்!
நான் நினைச்சிருந்தா கூலிங் கிளாஸ் போட்டு போட்டோ சூட் எடுத்து இருக்கலாம்.. முதல்வரை சீண்டும் இபிஎஸ்!
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget