Joker Thulasi Passes Away: கொரோனா பாதித்த நடிகர் ‛ஜோக்கர்’ துளசி காலமானார்
1976ஆம் ஆண்டு ‘உங்களில் ஒருத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, தமிழச்சி, மருதுபாண்டி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நல்ல காமெடி நடிகராகவும் திகழ்ந்தார். 1992ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘திருமதி பழனிசாமி’ படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழந்தார்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு திரைப்பிரலங்கள் பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மூத்த நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். ஜோக்கர் துளசி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். நாடக நடிகராக இருந்த இவர், 1976ஆம் ஆண்டு ‘உங்களில் ஒருத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, தமிழச்சி, மருதுபாண்டி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நல்ல காமெடி நடிகராகவும் திகழ்ந்தார். 1992ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘திருமதி பழனிசாமி’ படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி, அழகு, கஸ்தூரி, நாணல், மாதவி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கொரோனாவில் உயிரிழந்த இவரது மறைவுக்கு நடிகர் மோகன் ராமன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">RIP - " Joker " Thulasi. Has been acting since the mid 70s . A very affable person , deeply interested in Astrology etc . I pray for his Athma to attain Sadhgathi. Did many films and TV serials together. I pray his family finds the strength to bear this loss. Aum Shanthi. <a href="https://t.co/E85tpwdB1i" rel='nofollow'>pic.twitter.com/E85tpwdB1i</a></p>— Mohan Raman (@actormohanraman) <a href="https://twitter.com/actormohanraman/status/1391420806941401088?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 9, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
கடந்த சில தினங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டி.கே.எஸ் நடராஜன், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் ஆகியோரை திரையுலகம் இழந்துள்ள நிலையில், ஜோக்கர் துளசியின் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.