மேலும் அறிய
Advertisement
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் ஐடி ரெய்டு
கரூரில் உள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் இல்லத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஸ்டாலின், துரைமுருகன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கரூரில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தி பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பிரதமர் மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், திமுகவினரின் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion