Zomato 10 Min Food Delivery: ”10 நிமிடத்தில் டெலிவரியா?” - கலாய்த்த மீம்ஸ்களுக்கு பதிலளித்த ஜொமேட்டோ நிறுவனர்
மீம்ஸ்கள் குவிந்து வரும் நிலையில், ஜொமாட்டோ நிறுவனம் வைக்கப்படும் கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கு பதில் அளித்திருக்கிறார் ஜொமாட்டோ நிறுவனர் திபீந்தர் கோயல்.
நாட்டிலேயே முதன்முறையாக அதிகவேக உணவு டெலிவரியை சொமாட்டோ (Zomato) நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் திபீந்தர் கோயல் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இனி உணவு 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் அறிவித்த திபிந்தர் கோயல், ‘உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10 உணவு டெலிவரி நேரமும் 10 நிமிடம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஜொமாட்டோவின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் மீம்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது.
#Zomato Delivery Partner on it's way with 10 minutes order. pic.twitter.com/2LVAefXTzV
— Ispider Man (@Alone_Mastt) March 21, 2022
Zomato 10 mins food delivery 😀#Zomato pic.twitter.com/qSsYCAeDnE
— Debarghya Sil (@debarghyawrites) March 21, 2022
From now onwards stay away from #Zomato riders. pic.twitter.com/PwqEhv7EeI
— Amul Joshi (@amul_joshi) March 21, 2022
zomato: will deliver food in 10 minutes
— Tina Gurnaney (@TinaGurnaney) March 21, 2022
the food: pic.twitter.com/dwGTqnrA8g
மீம்ஸ்கள் குவிந்து வரும் நிலையில், ஜொமாட்டோ நிறுவனம் வைக்கப்படும் கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கு பதில் அளித்திருக்கிறார் ஜொமாட்டோ நிறுவனர் திபீந்தர் கோயல். இது குறித்து இன்று காலை அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “குறிப்பிட்ட சில பகுதிகளிலும், குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே 10 நிமிடத்தில் டெலிவரி செய்ய இருக்கின்றோம். 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யவில்லை என்றால் டெலிவரி பார்ட்னர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. சரியான நேரத்தில் டெலிவரி செய்பவர்களுக்கு கூடுதல் சம்பளம் தரப்பட மாட்டாது” என தெரிவித்திருக்கிறார்.
Again, 10-minute delivery is as safe for our delivery partners as 30-minute delivery.
— Deepinder Goyal (@deepigoyal) March 22, 2022
God, I love LinkedIn :P
(2/2) pic.twitter.com/GihCjxA7aQ
மேலும், 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படுவது முற்றிலும் ஆரோக்கியமானது, எளிதாக சமைக்கக்கூடிய உணவுகளை மட்டும் டெலிவரி செய்ய இருப்பதாக உறுதி அளித்திருக்கிறார் தீபிந்தர் கோயல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்