YS JaganMohan Reddy : என் மகளோட இருக்கப்போறேன்.. கட்சியில் இருந்து விலகிய ஆந்திர முதலமைச்சரின் தாய்..
ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து (YSRCP) வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு தெலுங்கானாவில் அரசியல் கட்சியைத் தொடங்கிய தனது மகளுக்கு ஆதரவாக நிற்க விரும்புவதாகக் கூறி, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயலட்சுமி, ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து (YSRCP) வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
விஜயம்மா என்று பிரபலமாக அறியப்பட்ட அவர், ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை குண்டூரில் தொடங்கிய கட்சியின் இரண்டு நாள் கூட்டத்தில் YSRCPன் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும், அதன் கௌரவத் தலைவர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
View this post on Instagram
View this post on Instagram
செப்டம்பர் 2009 ஹெலிகாப்டர் விபத்தில் அவரது கணவர், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி (ஒய்எஸ்ஆர்) இறந்ததைத் தொடர்ந்து, கடப்பா மாவட்டத்தில் புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியை விஜயம்மா பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் 2014 தேசிய தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் YSRCP கட்சியின் கௌரவத் தலைவராகத் தொடர்ந்தார். அவரது மகள் ஒய் எஸ் ஷர்மிளா, ஜூலை 2021 ஆண்டில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கினார்.
பொதுக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய விஜயம்மா, தெலங்கானாவில் தனித்துப் போராடி வரும் தனது மகளுக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர்சிபியில் இருந்து விலகுவதாகக் கூறினார். ஆந்திராவில் தனது சகோதரருக்கு சிரமத்தைத் தவிர்க்க ஷர்மிளா தெலுங்கானாவில் கட்சியைத் தொடங்கினார். ராஜண்ண ராஜ்ஜியம் என அழைக்கப்படும் ஒய்.எஸ்.ஆர் ஆட்சியைத் தெலுங்கானாவில் நிறுவ அவர் தனியே போராடுகிறார். அவளது போராட்டத்தில் நான் துணை நிற்க முடிவு செய்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.