மேலும் அறிய

Yaduvash kumar: "பிராமணர்கள் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள்; இங்கிருந்து துரத்த வேண்டும்" - ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் சர்ச்சை பேச்சு...

பிராமணர்கள் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்களை அங்கேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் சுபவுல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பிராமணர்கள் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. அவர் சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்டில் பிராமிணர்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என்றார்.

மேலும், பிராமணர்கள் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் பிராமணர்களை அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கே அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர்கள் இங்கேயே செட்டிலாகி விட்டனர் என்றும் பிராமணர்கள் நம்மை பிரித்து ஆட்சி செய்ய முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். நாம் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும், என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் கருத்துக்கள் பேசு பொருளாகியுள்ளது.  

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் உள்ள ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் குமார் ஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள்  விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன என்றார். இது போன்ற கருத்துக்களுக்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவை  மஹாகத்பந்தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பாஜக மண்டல தலைவர் பிரீதம் சிங் லோதி என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ”பிராமணர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். அவர்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். மக்களின் பணத்தில் சொத்துகளை வாங்கிக் குவிக்கின்றனர்” என்றார்.

இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இந்த நிலையில் பிராமணர்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்தாக, பாஜக இளைஞரணி தலைவர் பிரவீன் மிஸ்ரா என்பவர், பிரிதம் சிங் லோதி மீது போலீசில் புகார் கொடுத்தார். இவ்விவகாரம் குறித்து பிரீதம் சிங் லோதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிராமணர்கள் குறித்து பேசிய பிரீதம் சிங் லோதி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவின் முன்னாள் முதல்வர் உமாபாரதியின் நெருங்கிய உதவியாளராக இருக்கும் பிரீதம் சிங் லோதி, கடந்த 2013 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் பிச்சோர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget