மேலும் அறிய

Wrestlers Protest: போராட்டத்தை கைவிட்ட மல்யுத்த வீரர்கள்... ஏன் திடீர் முடிவு? அடுத்து என்ன செய்யபோகிறார்கள்?

இதுகுறித்து மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்சி மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீர் செய்துள்ளனர். 

அரசியல் ரீதியாக அதிகாரம் படைத்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் புகாரில் சிக்கிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தபோதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தை கைவிட்ட மல்யுத்த வீரர்கள்:

இந்நிலையில், தெருக்களில் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு நீதிமன்ற போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்சி மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீர் செய்துள்ளனர். 

அதில், "ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இந்த வழக்கில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடரும். ஆனால், அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும். சாலையில் அல்ல. 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தத்தை பொறுத்தவரையில், வாக்குறுதி அளித்தபடி, தேர்தலை நடத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை காத்திருப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விடைபெறுவதாக போகட்டும் மாலிக்கும் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளின் புகார்களைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த மாத தொடக்கத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தள்ளிப்போகும் மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல்:

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரிஜ் பூஷன் சிங், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இதுகுறித்து அவரது உதவியாளர் கூறுகையில், "போலிஸுடன் அவர் தொடர்ந்து ஒத்துழைப்பார். நீதிமன்றத்தின் முடிவை மதிப்பார்" என்றார்.

மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் மத்திய அரசு மல்யுத்த வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 5 முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைத்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், சம்மேளனத்திற்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், குவஹாத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் தேர்தல் தள்ளிப்போகும்  சூழல் உருவாகியுள்ளது. இது, மல்யுத்த வீரர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget