Wrestler Khali Joins BJP: நோ சொன்னதா ஆம் ஆத்மி...? பாஜகவில் ஐக்கியமான மல்யுத்த வீரர் ‘கிரேட் காளி’
Wrestler The Great Khali Joins BJP: பிரபல மல்லியுத்த வீரரான கிரேட் காளி பாஜகவில் இணைந்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி அடுத்த மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதன்படி உத்திரபிரதேச மாநில தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில் பிரபல மல்யுத்த வீரர் காளி பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH Professional wrestler Dalip Singh Rana, also known as The Great Khali, joins BJP in Delhi pic.twitter.com/BmB7WbpZzx
— ANI (@ANI) February 10, 2022
முன்னதாக, திலீப் சிங் ராணாவின் (கிரேட் காளி) புகைப்படத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது கட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, டெல்லியின் செயல்பாடுகளுக்கு கிரேட் காளி பாராட்டு தெரிவித்தாக குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து கிரேட் காளி டெல்லி முதல்வரை சந்தித்து பேசினார்.
View this post on Instagram
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், டெல்லி செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக கூறினார். இந்த நிலையில், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
View this post on Instagram
ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.