மேலும் அறிய

Bajrang Punia: "அமித் ஷா சந்திப்பு குறித்து வெளியே சொல்லக்கூடாது என சொன்னார்கள்" - பரபரப்பை கிளப்பிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா..!

"அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று அரசாங்க தரப்பில் கேட்டுக் கொண்டனர்"

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பிக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத் ஆகியோர் கடந்த மே மாதம் 31ஆம் தேதி தங்கள் பணிக்கு திரும்பினர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, பல்வேறு விதமான ஊகங்கள் உலா வர தொடங்கின.

குறிப்பாக, கடந்த சனிக்கிழமை மாலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் சந்தித்து பேசினர். இந்த சூழ்நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கைவிட்டதாக பரவிய செய்திகள் பரபரப்பை கிளப்பின.

போராட்டத்தை கைவிட்டார்களா மல்யுத்த வீரர்கள்?

போராட்டத்தை கைவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்த சாக்‌ஷி மாலிக், "இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, நாமும் பின்வாங்க மாட்டோம். சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என குறிப்பிட்டார்.

போராட்டத்தை கைவிடவில்லை என மல்யுத்த வீரர்கள் விளக்கம் அளித்தாலும், அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பில் அப்படி என்னதான் நடந்தது என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.

அமித் ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் டீலிங்கா..?

இந்நிலையில், அதற்கு விளக்கம் தரும் வகையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பதில் அளித்துள்ளார். "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சனிக்கிழமை மாலை நடந்த சந்திப்பு பற்றி பேச வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டது" என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட பஜ்ரங் புனியாவிடம் அமித் ஷாவுடன் டீலிங் மேற்கொண்டுள்ளீர்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "மத்திய அமைச்சருடன் எந்த விதமான டீலிங்கும் மேற்கொள்ளவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக அமித் ஷா எங்களிடம் கூறினார். போராட்டம் நின்றுவிடவில்லை. அது தொடரும். அதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாங்கள் வியூகம் வகுத்து வருகிறோம்" என்றார்.

அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து மனம் திறந்த பஜ்ரங் புனியா, "அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டது. ஆனால், அவர்களே ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிட்டனர். விளையாட்டு வீரர்கள் அரசாங்கத்தின் பதிலில் திருப்தி அடையவில்லை. அரசாங்கமும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை" என்றார்.

அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர்கள், "இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சிறுமி உள்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் வைத்த பாலியல் புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
"சட்டம் தன் கடமையை செய்யும்" என மல்யுத்த வீரர்களிடம் அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget