Worlds Best Whisky: உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு - என்ன பிராண்ட் தெரியுமா?
உலக அளவில் சிறந்த விஸ்கியாக இந்தியாவின் இந்திரி விஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2023 விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதுகளில் உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி, 'இந்திரி', விருது பெற்றுள்ளது. இந்திய விஸ்கிக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஏனெனில் whiskies of the world எனப்படுவது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க விஸ்கி ருசிக்கும் போட்டிகளில் ஒன்றாகும்.
Indian whiskey, the 'Indri' is awarded as the best whisky in the world at the 2023 Whiskies of the World Awards. pic.twitter.com/2TzTJTF5nZ
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 1, 2023
இந்திய விஸ்கி:
இந்திரி என்பது இந்தியாவின் ஹரியானாவில் உள்ள பிக்காடில்லி டிஸ்டில்லரீஸின் உள்ளூர் பிராண்ட் ஆகும். இது 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் டிரிபிள்-பேரல் சிங்கிள் மால்ட் விஸ்கியான இந்திரி-டிரினியை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திரி 14 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது என்று தனியார் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்களில் பல வகைகள் உள்ளது. ப்ராண்டி, விஸ்கி, வோட்கா, ரம், ஜின், ஃபென்னி, டக்கீலா என பல வகைகள் உள்ளது. இதில் பெரும்பாலும் பலருக்கும் விஸ்கி மிகவும் பிடித்தமான மதுபானமாக உள்ளது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் விஸ்கியை விரும்புகின்றனர்.
சிறந்த விஸ்கியாக தேர்வு:
அந்த வகையில் இந்தியாவின் இந்திரி விஸ்கி உலகின் சிறந்த விஸ்கியாக அறிவிக்கப்பட்டுள்ளது. Whiskeys of the world என்ற போட்டியில் அமெரிக்க சிங்கிள் மால்ட், ஸ்காட்ச் விஸ்கி, போர்பன்ஸ், கனடியன் விஸ்கி, ஆஸ்திரேலிய சிங்கிள் மால்ட் மற்றும் பிரிட்டிஷ் சிங்கிள் மால்ட் போன்ற நூற்றுக்கணக்கான சர்வதேச பிராண்டுகளை இந்தியாவின் இந்திரி பின்னுக்கு தள்ளி சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
"உலகெங்கிலும் உள்ள சிறந்த விஸ்கிகளில் இந்திரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திரி தீபாவளி கலெக்டரின் பதிப்பு 2023, மதிப்புமிக்க விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதுகளில் சிறந்த விஸ்கியாக அறிவிக்கப்பட்டுள்ளது. டபுள் கோல்ட் என விருது பெற்றுள்ளது. இந்த வெற்றி, இந்திய விஸ்கியின் தரம் மற்றும் வளர்ந்து வரும் இந்திய சிங்கிள் மால்ட்களுக்கு ஒரு சான்றாகும " என்று இந்திய விஸ்கியின் தயாரிப்பாளர்களான இந்திரி ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
புதிய பதிப்பு:
தீபாவளி கலெக்டரின் பதிப்பை உருவாக்குவது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில் "இந்திரி தீபாவளி கலெக்டரின் பதிப்பு 2023 என்பது six row பார்லியால் செய்யப்பட்ட பீட் இந்திய சிங்கிள் மால்ட் ஆகும், இது இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய செப்பு பாத்திரத்தில் வடிகட்டப்படுகிறது. PX ஷெர்ரி கேஸ்க்ஸில் கவனமாக பதப்படுத்தப்படுகிறது. வட இந்தியாவின் வெப்பமண்டல காலநிலைக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க வகையில் இந்த விஸ்கியின் சுவை கவர்ந்திழுக்கும். சாக்லேட், உலர்ந்த பழங்கள், வறுக்கப்பட்ட கொட்டைகள், நுட்பமான மசாலா, ஓக், பிட்டர்ஸ்வீட் சாக்லேட் போன்ற எண்ணற்ற சுவைகளும் இதில் இடம்பெற்றுள்ளது" என தெரிவித்துள்ளது.
இந்திரியின் சிங்கிள் மால்ட் டிரினி இதற்கு முன்பு டோக்கியோ விஸ்கி மற்றும் ஸ்பிரிட்ஸ் போட்டி 2023, ஐம்பது சிறந்த உலக விஸ்கிகள் 2022 விருது, லாஸ் வேகாஸில் நடந்த சர்வதேச விஸ்கி போட்டி மற்றும் உலகின் விஸ்கி அட்வகேட் டாப் 20 விஸ்கிகளில் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.