மக்களவையில் முதல் உரை;அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சி - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
மக்களவையில் எம்.பி. பிரியங்கா காந்தியின் முதல் உரை பற்றிய விவரங்களை காணலாம்.

கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் முதல்முறையான உரையாற்றினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இட ஒதுக்கீடு, நாடு முழுவதும் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் எம்.பி. பிரியங்கா காந்தியின் உரையில் இடம்பெற்றிருந்தன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ,25-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய (13.12.2024) கூட்டத்தொடரில் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி முதல்முறையாக உரையாற்றினார். இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி அது அதுகுறித்தான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி தனது முதல் உரையில், அரசியலமைப்புச் சட்டம் பற்றி பேசினார்.
वायनाड में जो आपदा आई, उसमें एक लड़के ने 6 घंटों तक अपनी मां को बचाने की कोशिश की।
— Congress (@INCIndia) December 13, 2024
इन बच्चों और महिलाओं का साहस, संभल के बच्चों का साहस.. ये साहस इस संविधान की देन है।
ये आत्मविश्वास इस संविधान ने दिया है। ये देश भय से नहीं चल सकता, ये देश साहस से ही चलेगा।
: लोक सभा में… pic.twitter.com/70fD5E43WT
” நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை உடைத்தெறிய எல்லா செயல்களை செய்து வருகிறது. நீதி, ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கவசம். ஆனால், நேரடி நியமனம், தனியார்மயமாக்கல், இடஒதுக்கீடு முறையை மாற்ற நினைப்பது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றிருந்தால், அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாற்றியிருப்பார்கள்.” என்று விமர்சனம் செய்தார்.
தனியார்மயம்:
பிரியங்கா காந்தி, “தனிநபர் ஒருவரின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து 142 கோடி இந்தியர்களின் நலனை கவனத்தில் கொள்ளவிலை. நாட்டின் வளங்கள், விமான நிலையங்கள், நிலங்கள் என எல்லாம் ஒரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. துறைமுகங்கள் முதல் விமான நிலையங்கள் வரை, சுரங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. ஏழை மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். பொதுவளங்கள் இப்படி ஒருவருக்கு அளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
தனியார் மயமாக்கல், உயர் பதவிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை நியமிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு கொள்கையை பலவீனமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் இல்லாமல் இருந்திருந்தால், அரசியல் சட்டத்தை மாற்றும் பணியை தொடங்கியிருப்பார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது உண்மையற்ற புகார்கள் மூலம் வழக்கு தொடுக்கப்படுகின்றன. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது மக்களாட்சிக்கு எதிரானது." என்று பா.ஜ.க.வின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
#WATCH | "Wonderful speech. Better than my maiden speech, let's put it like that," says Lok Sabha LoP Rahul Gandhi on the maiden address of Congress MP Priyanka Gandhi Vadra in Lok Sabha pic.twitter.com/sS80UPEtw0
— ANI (@ANI) December 13, 2024
எம்.பி. பிரியங்கா காந்தி உரையில் இடம்பெற்ற முக்கியமானவை:
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு நீதி பெறும் உரிமையையும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் வலிமையையும் வழங்கியுள்ளது.
- உலகில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவின் சுதந்திர போராட்டம் தனித்துவமானது. ஏனெனில், நாட்டின் சுதந்திர போராட்டம் நேர்மை, அகிம்சை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.
- உத்திர பிரதேச மாநிலத்தின் Sambhal பகுதியில் இருந்து இருவர் என்னை சந்த்க வந்தனர். Adnan, Uzair இருவரிடமும் நான் உரையாடினேன். Adnan-க்கு என் மகன் வயதிருக்கும். உசார் 17 வயது இளைஞர். அவர்களின் தந்தை தையல் தொழில் செய்பவர். அவருக்கு பெரும் கனவு ஒன்று இருக்கிறது. அவரின் பிள்ளைகளை எப்படியாவது நன்றாக படிக்க வைத்துவிட வேண்டுமென்று. ஆனால், அவர் சம்பல் வன்முறையில் காவல்துறையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டார். Adnan டாக்டரா வருவேன் என தெரிவித்தார். அவர் அப்பாவின் கனவை நிறைவேற்றுவேன் எனச் சொன்னார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவருக்குள் நம்பிக்கையையும் கனவையும் விதைத்துள்ளது.
- அரசு இட ஒதுக்கீடு நடைமுறையை தனியார்மயப்படும் செயல்களால் வலுவிழக்க செய்கிறது.
- நாட்டு மக்கள் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை என்கின்றனர். இதன் தேவையை அரசு உணர வேண்டும். அப்போதுதான் மக்களின் நிலை, தேவைகள் ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்றவாறு திட்டங்களை உருவாக்க முடியும்.
”இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரை சில சமயங்களில் நீங்கள் யாருடைய பெயரை சொல்லத் தயங்குகிறீர்களோ..அவர் நேரு.. அவர் ஹெச்.ஏ.எல், பெல், செயில், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ரயில்வே, ஐ.ஐ.டி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதை மறக்க வேண்டாம். புத்தகங்களில் அவரது பெயரை நீக்கி முயற்சிக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தேசத்தின் வளர்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றில் அவரது பங்கை ஒருபோதும் அழிக்க முடியாது.” என நேரு பற்றி பேசினார்.





















