மேலும் அறிய

Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அவையில் சந்தித்த முதல் பெரும் பின்னடைவு இதுவாகும். இதற்கு முன் எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் போனதில்லை

நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா (அரசியலமைப்பு 131-வது திருத்த மசோதா, 2026) மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் தோல்வியடைந்தது. 

வாக்கெடுப்பில் நடந்தது என்ன?

நாடாளுமன்றத்தில் பதிவான மொத்தம் 528 வாக்குகளில், 298 வாக்குகள் ஆதரவாகவும், 230 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. பெரும்பான்மை இருந்தபோதிலும், அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேவையான எண்ணிக்கையை விட 54 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் இந்த மசோதா தோல்வியைத் தழுவியது.

இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. நீங்கள் ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டீர்கள். பெண்களைக் கௌரவிக்கும் எங்களது போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

மோடி அரசுக்கு முதல் பின்னடைவு!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அவையில் சந்தித்த முதல் பெரும் பின்னடைவு இதுவாகும். இதற்கு முன் எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் போனதில்லை. இது வெறும் அரசியல் நெருக்கடியால் அல்ல, இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கட்டாய விதிமுறைகளால் நிகழ்ந்துள்ளது.

நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது.2029-ஆம் ஆண்டிற்குள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்துவது.இருப்பினும், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதா ஏன் நிறைவேறவில்லை? 

அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அதற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.

  1. சிறப்பு பெரும்பான்மை: அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும்.

  2. வாக்களிப்போர் எண்ணிக்கை: அவையில் சமூகளித்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 2/3 பங்கு ஆதரவு தேவை.

  3. மாநிலங்களின் ஒப்புதல்: இது தவிர, பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியும்.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், 298 வாக்குகள் பெற்றும் மசோதா முறியடிக்கப்பட்டது.

பிரியங்கா காந்தி காட்டம்: 

மசோதா தோல்வியடைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அவர் கூறியதாவது:"காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரானது அல்ல. ஆனால், அரசு இந்த மசோதாவை அமல்படுத்த முயன்ற விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதும், இதில் OBC பிரிவினரைச் சேர்க்காததும் மிகப்பெரிய தவறு. இதனால்தான் காங்கிரஸ் இதனை ஆதரிக்கவில்லை."

மேலும், இந்த தோல்வி ஜனநாயகத்திற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் கிடைத்த "பெரிய வெற்றி" என்று குறிப்பிட்ட அவர், இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை ஆன்மாவிற்கு எதிரானது என்றும், இது பெண்களுக்கானது மட்டுமல்ல, அரசியல் கட்டமைப்பையே மாற்றும் முயற்சி என்றும் குற்றம் சாட்டினார்.


About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget