அதிக பேருடன் பாலியல் உறவு வைப்பது ஆண்களா? பெண்களா? தேசிய குடும்ப நல ஆய்வில் வெளியான தகவல்
ஆண்களை விட பெண்கள் அதிக நபர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆண்களை விட பெண்கள் அதிக நபர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் மூலம் இது தெரிய வந்துள்ளது. ஆனால், மனைவி/உடன் வாழ்ந்த ஒருவர் அல்லாத ஒருவருடன் உடலுறவு வைத்து கொள்வதில் ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக உள்ளது. இது பெண்களை விட 0.5 சதவீதம் அதிகம்.
Women found to have nearly twice as many sex partners than men in 11 states/UTs: National Family Health Survey
— Press Trust of India (@PTI_News) August 19, 2022
1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக ஆண்களை விட பெண்கள், அதிக நபர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஒரு பெண் சராசரியாக 3.1 செக்ஸ் பார்ட்னர்களை கொண்டுள்ளனர். ஆண்களை பொறுத்தவரை, அவர்கள் சராசரியாக 1.8 செக்ஸ் பார்ட்னர்களை கொண்டுள்ளனர்.
Great finding of National Family Health Survey. Kudos to Surveyors 👏👏 https://t.co/3PywPehawp
— Gaurav Agrawal (@GauravAgrawaal) August 19, 2022
ஆனால், கணக்கெடுப்புக்கு முந்தைய 12 மாதங்களில், தங்கள் மனைவி அல்லது துணையாக இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 0.5 சதவீதமாக உள்ளது. 2019-21 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப நல ஆய்வு, 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் 707 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
சமூக - பொருளாதார மற்றும் பிற பின்னணி பண்புகள் குறித்து தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை தரவுகளை வழங்குகிறது. கொள்கைகளை உருவாக்கவும் பயனுள்ள திட்டத்தை செயல்படுத்துவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
Rajasthan had the highest number of women who had on an average 3.1 sex partners as against the 1.8 for menhttps://t.co/hWG31nULHX
— Free Press Journal (@fpjindia) August 19, 2022