மேலும் அறிய

திருமணத்திற்குப் பிறகு பெண் வேலை பார்ப்பதெல்லாம் விவாகரத்துக்கு காரணமில்லை: மும்பை உயர்நீதிமன்றம்

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்க விரும்புவதும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததும் குற்றமல்ல கொடூரமான செயலும் அல்ல. அவையெல்லாம் விவாகரத்துக்குப் போதிய காரணமே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தான் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தன் மனைவி தனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மிரட்டுவதாகக் கூறி அவரிடமிருந்து விவாகரத்து கேட்டார். அதுவும் இந்தக் காரணத்துக்காக தன் மனைவி தனக்குத் தெரியாமலேயே ஒப்புதல் பெறாமலேயே கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் அந்தக் கணவர் விவாகரத்து கேட்டிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அடுல் சந்த்ரூகர், நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13ன் படி மனைவியின் நடத்தை கொடூரச் செயல் ஆகாது என்றனர். அதாவது, ஒரு பெண் திருமணத்திற்குப் பின்னர் தனது தகுதிக்கேற்ப வேலை தேடிக் கொள்வது விவாகரத்துக்கான காரணமாகாது. விவாகரத்து கோரும் கணவர் தன் மனைவியின் செயல்பாட்டால் தன்னால் அவருடன் வாழ இயலவே இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றனர்.

மேலும், அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியேறி 3 ஆண்டுகளுக்குப் பின்னரே வேலையில் அமர்ந்துள்ளார். ஆதலால் அந்த காலக்கட்டத்தில் அப்பெண்ணை தன் வீட்டிற்கு திருப்பியழைத்துவர மனுதாரர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது என்று கூறி அவரது மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதேபோல் ஒரு பெண் தனக்கு வேண்டாத கர்ப்பத்தை கலைப்பது என்பதும் அவருடைய சொந்த முடிவு என்று நீதிபதிகள் கூறினர். அண்மையில் கேரள உயர் நீதிமன்றம் கூட ஒரு கருவை கலைக்க மனைவி தனது கணவரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முத்தாய்ப்பு தீர்ப்பு: 
அண்மையில், திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சியை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி "சட்டத்தின் கீழ் விதிவிலக்குகள் இருக்கும் போது, ​​மருத்துவ ஆலோசனை அனுமதிக்கும் பட்சத்தில், திருமணமாகாத பெண்களை ஏன் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க கூடாது. "கணவன்" என்பதை "பார்ட்னர்" என்று மாற்றியதால் நாடாளுமன்றத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்பட்டவர்களில் அவர்கள் திருமணமாகாத பெண்களையும் கருத்தில் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது" என்று தெரிவித்திருந்தார். விவாகரத்து பெற்றவர்கள், கைம்பெண் அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பால் பிரிந்து வாழ்பவர்கள் போன்ற திருமணமாகாத பெண்களும் தங்கள் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் வகையில் தீர்ப்பை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்க விரும்புவதும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததும் குற்றமல்ல கொடூரமான செயலு அல்ல. அவையெல்லாம் விவாகரத்துக்குப் போதிய காரணமே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Aadhav Arjuna : ”சொன்ன வேலையை செய்யாமல், சொந்த வேலையை பார்ப்பதா?” ஆதவ் அர்ஜூனா ரெய்டு பகீர் பின்னணி..!
Aadhav Arjuna : ”சொன்ன வேலையை செய்யாமல், சொந்த வேலையை பார்ப்பதா?” ஆதவ் அர்ஜூனா ரெய்டு பகீர் பின்னணி..!
”போலீஸ் வாகனத்தில் மது அருந்திய SSI சஸ்பெண்ட்” அதிரடி உத்தரவு..!
”போலீஸ் வாகனத்தில் மது அருந்திய SSI சஸ்பெண்ட்” அதிரடி உத்தரவு..!
Embed widget