Zakia Jafri : இருபது வருடப் போராட்டம்.. தகுதியற்றது எனச்சொன்ன உச்சநீதிமன்றம் : யார் இந்த ஜாகியா ஜஃப்ரி?
ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
2002 குஜராத் கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பலருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team) வழங்கிய க்ளீன் சீட்டை, எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
யார் இந்த ஜாகியா ஜாஃப்ரி?
குஜராத்தில் 2002 கோத்ரா கலவரத்திற்கு ஒரு நாள் கழித்து அகமதாபாத்தில் உள்ள சமன்புராவில் உள்ள கீழ்-நடுத்தர வர்க்க முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான குல்பெர்க் சொசைட்டியில் 68 பேருடன் சேர்ந்து கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஆவார். எஹ்சான் 1972 ல் காங்கிரஸின் அகமதாபாத் கிளையின் தலைவரானார். அவர் 1977ல் அகமதாபாத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்ஸான் வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்ட நிலையில் ஜாக்கியா 2006-ஆம் ஆண்டு முதல் நீதிக்காக போராடி வருகிறார், வன்முறை தொடர்பாக மோடி மற்றும் பிற உயர் அரசியல்வாதிகளுக்கு எதிராக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்று புகார் அளித்தார்.
குல்பர்க் சொசைட்டி சம்பவம் உட்பட ஒன்பது வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் 2008-ஆம் ஆண்டில் அரசுக்கு உத்தரவிட்டபோது, ஜாகியாவின் நீதிக்கான கூக்குரல் வேகம் பெற்றது. ஜாஃப்ரியின் புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு 2012-ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் அறிக்கையின் நகலை ஜாகியாவிடம் வழங்குமாறு எஸ்ஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது ஜாகியா, “இப்போதுதான் உண்மையான மோதல் தொடங்குகிறது. எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்பு நீதிமன்றம் எங்கள் பேச்சைக் கேட்கவேண்டும். உச்ச நீதிமன்றத்தால் இந்த வழக்கில் அமிக்கஸ் கியூரியாக நியமிக்கப்பட்ட ராஜு ராம்சந்திரன் அளித்த சமர்ப்பிப்புகள் எஸ்ஐடியின் அறிக்கையில் உள்ளதா என்பதைப் பார்க்க காத்திருப்பதாக அவரது மகன் தன்வீர் கூறினார்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஜாகியா உறுதியாக இருந்தார். 2002ல் நடந்த கோத்ரா குல்பர்க் சொசைட்டி படுகொலையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் உட்பட 24 பேர் குற்றவாளிகள் என்பது அகமதாபாத்தில் உள்ள சிறப்பு எஸ்ஐடி நீதிமன்றம் 2016ல் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பற்றிப் பேசிய ஜாகியா, “இந்தத் தீர்ப்பு எனக்கு பாதி நியாயம் செய்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் 2021 டிசம்பரில் முழு வழக்கு விசாரணையும் முடிந்த நிலையில் ஜக்கியாவின் மேல்முறையீடு தகுதியற்றது மற்றும் தள்ளுபடி செய்யப்படத் தகுதியானது என்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் கூறியது.