Watch Video : “ஆம்புலன்ஸிற்கு கொடுக்க காசு இல்லை” - தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்... வீடியோ வைரல்
மேற்கு வங்கத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயை, ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல பணம் இல்லாததால், மகனும், அவரது தந்தையும் 50 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Watch Video : மேற்கு வங்கத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயை, ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல பணம் இல்லாததால், மகனும், அவரது தந்தையும் 50 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் தெவன். 72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது தாயை ஜல் பாய்குரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன் கிழமை அனுமதித்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த நாளே உயிரிழந்தார். அங்கிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தாயாரின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.3,000 கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களிடம் இந்த தொகையானது இல்லை.
தாயின் உடலை தோளில் சுமந்த மகன்
இதனால், தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் வைத்து சுமந்து கொண்டு தனது சொந்த ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவரது தாயார் உடலின் மற்றொரு பகுதியை அவரது தந்தை சுமந்தவாறு பின்தொடர்ந்தார். இந்த காட்சியானது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
The Son of Bengal is carrying the dead body of Bengal's health system!
— Dr. Shankar Ghosh (@ShankarGhoshBJP) January 5, 2023
Which Bengal is this ?@narendramodi @AmitShah @amitmalviya @sunilbansalbjp @mangalpandeybjp @RajuBistaBJP @SuvenduWB @SwarnaliM @Priyankabjym @Amrita_06_11 @BJP4Bengal @Amitava_BJP @ pic.twitter.com/Vafb5hGFfp
இதை அடுத்து, சமூக சேவை நிறுவனம் ஒன்று இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து, ராம்பிரசாத் தெவனின் தாயார் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றுள்ளது.
இதுபற்றி ராம் பிரசாத் தெவன் கூறியதாவது, " எங்கள் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.900 கொடுத்தோம். ஆனால் அம்மாவின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்வதற்கு ரூ.3,000 கேட்டனர். எங்களால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை. அதனால், அம்மாவின் உடலை போர்வையில் சுற்றி என் தோளில் வைத்து சுமந்த சொந்த ஊருக்கு எடுத்த செல்ல நடக்க தொடங்கினேன்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
குளிரின் கோரத்தாண்டவம்.. உறையவைக்கும் உறைப்பனி: கான்பூரில் குளிருக்கு 25 பேர் பலி..