Mahua Moitra: புடவையுடன் கால்பந்து ஆட்டம்... பேச்சால் மட்டுமல்ல விளையாட்டாலும் அசர வைத்த எம்.பி..
புடவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.மஹூவா மொய்த்ரா கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்கத்தில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.மஹூவா மொய்த்ரா கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கால்பந்து போட்டி:
மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கலந்து கொண்டார்.
அப்போது போட்டி நடைபெற்ற மைதானத்தில் இறங்கி கால்பந்து விளையாடினார். புடவை அணிந்து விளையாடும் புகைப்படங்களை எம்.பி. .மஹூவா மொய்த்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கால்பந்து போட்டியில் மகிழ்ச்சியான தருணங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆம் நான் புடவையில் விளையாடினேன் என குறிப்பிட்டுள்ளார்.
Fun moments from the final of the Krishnanagar MP Cup Tournament 2022.
— Mahua Moitra (@MahuaMoitra) September 19, 2022
And yes, I play in a saree. pic.twitter.com/BPHlb275WK
தற்போது, அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Under the leadership of TMC MP @MahuaMoitra, the MP Cup was played at Krishnanagar in Nadia district. Trinamool MP Mahua Moitra kicked the football on the football field to boost the morale of the football players. pic.twitter.com/NrZ4Ivjv7j
— PANKAJ CHOUDHARY (@PANCHOBH) September 19, 2022
View this post on Instagram