Watch Video | ஆபத்தில் முடிந்த பிரம்மாண்ட கல்யாணம்.. அந்தரத்தில் பறந்த மணமக்கள்... அலறியடித்த கூட்டம்!
பிரம்மாண்டத்தை பார்த்த பலரும் ஆஹாவென கையில் இருக்கும் போனை வைத்து படம் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி விபத்துக்குள்ளானது
இரு மனம் இணையும் திருமணங்களை இந்தியாவில் பெரிய திருவிழாவாகவே கொண்டாடுவார்கள். அவரவர்களின் வசதிக்கு ஏற்ப அந்தக் கொண்டாட்டம் இருக்கும். ஆட்டம், பாட்டம், இசை நிகழ்ச்சி என 3 நாட்கள் கொண்டாடும் திருமணங்களும் இங்குண்டு,. இப்போதெல்லாம் திரைப்பட பாணியில் பிரம்மாண்டமாக திருமண கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக திருமண ஏற்பட்டாளர்கள் சில அபாயமான விஷயங்களையும் செய்கின்றனர்.
உரிய பாதுகாப்பு இல்லாமல் எதாவது செய்யப்போக அது ஆபத்தாக முடிந்துவிடுகிறது. அப்படியான ஒரு திருமண கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராய்பூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் வளையம் மாதிரியான ஸ்டேஜில் நிற்க வைக்கப்பட்டு கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்டனர். மேடையில் பாடல் ஒலிக்க,சுற்றிலும் சிலர் நடனம் ஆட ஒரு அழகான படக்காட்சி போல இதனை உருவாக்கியுள்ளனர்.
Unfortunate accident at Raipur Wedding yesterday.
— Amandeep Singh 💙 (@amandeep14) December 12, 2021
Thank God all are safe.
source : https://t.co/yal9Wzqt2f pic.twitter.com/ehgu4PTO8f
இந்த பிரம்மாண்டத்தை பார்த்த பலரும் ஆஹாவென கையில் இருக்கும் போனை வைத்து படம் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி விபத்துக்குள்ளானது. மணமக்கள் ஏறி நின்ற வளையம் மாதிரியான மேடை அந்தரத்தில் இருக்கும் போதே ஒருபக்கமாக சரிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத உறவினர்கள் அலறியடித்துக் கொண்டி ஓடிச்சென்று மணமக்களை காப்பாற்றினர். இந்த விபத்தில் மணமக்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திருமண விபத்து வீடியோவை பகிர்ந்த பலரும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டங்கள் இருப்பது தவறில்லை. அதே நேரத்தில் அதனை பாதுகாப்பாக நடத்த வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Unfortunate accident at Raipur Wedding yesterday.
— Amandeep Singh 💙 (@amandeep14) December 12, 2021
Thank God all are safe.
source : https://t.co/yal9Wzqt2f pic.twitter.com/ehgu4PTO8f
சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்