![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மணமேடையில் மனைவியை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்.. என்ன புதுமை? வைரலாகும் வீடியோ..
மணமேடையில் அயான் சென் என்ற புகைப்பட கலைஞர் தனது மனைவியை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
![மணமேடையில் மனைவியை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்.. என்ன புதுமை? வைரலாகும் வீடியோ.. wedding photographer ayan sen clicks pics of his bride in his own wedding video goes viral மணமேடையில் மனைவியை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்.. என்ன புதுமை? வைரலாகும் வீடியோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/e05a2b44bed3e06e24f0be13d900dbb01680257028561589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணமேடையில் அயான் சென் என்ற புகைப்பட கலைஞர் தனது மனைவியை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்பது ஒவ்வொரு தனிநபர் வாழ்க்கையில் நிகழும் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாகும். காலம் காலமாக திருமணம் என்றால் கட்டாயம் இருக்கும் ஒரு விஷயம் என பார்த்தால் அது புகைப்படம் மற்றும் வீடியோதான். திருமணத்தில் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பல ஆண்டுகள் ஆனாலும் நினைவில் வரும் போது எடுத்துப்பார்த்தால் பொக்கிஷமாக இருக்கும். முந்தைய காலத்தில் சாதரண புகைப்படம் மற்றும் வீடியோ மட்டுமே இருந்தது. ஆனால் இன்று இருக்கும் நவீன உலகில் திருமணம் என்றால் pre wedding photoshoot, outdoor shoot, wedding photography, post wedding shoot என பல விதமாக மணமக்கள் புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர்.
View this post on Instagram
திருமணத்தில் மட்டுமே கேண்டிட், ட்ரெடிஷனல், வீடியோ என விதவிதமாக புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர். இன்றைய சமூகத்தில் திருமணம் என்றால் திருவிழா போல் நடைபெறுகிறது. அதிலும் மணமக்களுக்கு என்று பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகிறது. இதனை விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து வைக்கின்றனர். அதிலும் ஒரு புகைப்பட கலைஞருக்கு திருமணம் என்றால் எதிர்ப்பார்ப்புகள் அதிகம். அந்தவகையில் அயான் சென் என்ற புகைப்பட கலைஞர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அப்போது அந்த புகைப்பட கலைஞர் தனது மனைவியை மணமேடையில் தானே புகைப்படம் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சுமார் 3.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். பலரும் இந்த வீடியோவை பார்த்து பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனைவரும் இந்த வீடியோவிற்கு பாசிடிவ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)