Watch Video: எனக்கு ஆயிரம் வேலை.. சர்ர்ர்ரென சறுக்கி சென்ற அறிவாளி குரங்கு - வைரல் வீடியோ!
கோயில் ஒன்றில் குரங்கு ஒன்று கம்பிகளில் சறுக்கி கீழே இறங்கிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாங்களும் புத்திசாலிகள்தான் என்பதை குரங்குகள் மறுபடியும் ஒரு வீடியோ மூலம் நிரூபித்துள்ளன. அது என்ன வீடியோஎன்று கேட்கிறீர்களா.. கோயில் ஒன்றில் பக்தர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு ஏதுவாக கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படிக்கட்டுகளில் இருந்து குரங்குகள் கீழே இறங்கி வந்துக்கொண்டிருந்தன. மற்ற குரங்குகள் படிக்கட்டு வழியாக இறங்கிக்கொண்டிருந்த வேளையில் ஒரே ஒரு குரங்கு மட்டும் கம்பியின் மீது ஏறி, அதன் சாய்வு தளத்தை பயன்படுத்தி கீழே இறங்கியது. இதனால் மற்ற குரங்குகளை விட இந்த குரங்கு எளிதாகவும், வேகமாகவும் கீழே இறங்கியது. இது பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ஹெலிகாப்டர் யாத்ரா என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 6000த்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
SJ Suryah | நடிப்பில் மாஸ்.. வரிசைகட்டும் படங்கள்..! இனி எல்லாத்துலயும் எஸ்.ஜே.சூர்யா தான்.!#SJSuryah https://t.co/7rFdVvcEJp
— ABP Nadu (@abpnadu) November 28, 2021