Watch Video: தெரு நாயை கொடுமைப்படுத்திய கொடூர மனிதன்...ஹீரோவாக வந்த பசு மாடு...மாஸ் வீடியோ!
தெரு நாயின் காதை துருவி கொடுமைப்படுத்திய கொடூர மனிதனை, பசு மாடு முட்டி தூக்கி வீசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. இதில், சில அதிர்ச்சிகரமான வீடியோக்களும் அடங்கும்.
Karma 🙏🙏 pic.twitter.com/AzduZTqXH6
— Susanta Nanda IFS (@susantananda3) October 31, 2021
அந்த வகையில், வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர், உலகத்தில் நடக்கும் வித்தியாசமான மற்றும் அதிர்ச்சியை கொடுக்கக்கூடிய வீடியோக்களை பகிர்வதில் பெயர் பெற்றவர். தற்போது, இந்த அதிகாரி, ‘கர்மா’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்த வீடியோவில், கொடூர மனிதன் ஒருவன், தெருவோர நாயின் காதை துன்புறுத்துகிறான். வலியால் அந்த நாய் கதறியும், அந்த மனிதன் நாயை விடவில்லை. அப்போது, அருகில் இருந்த பசு மாடு ஒன்று இந்த கொடூர காட்சியை கண்டு கோபமடைந்து, அந்த கொடூர முட்டி மோதி தூக்கி போட்டது. நாயை கொடுமைப்படுத்தும்போது, பார்த்தும் கண்டுக்காமல் இருந்த அருகில் இருந்த மனிதர்கள். மாடு முட்டி மோதி அந்த மனிதன் கீழே விழுந்ததை பார்த்து எப்போதும் போல தங்களின் கேவலமன சிரிப்பை வெளிப்படுத்தினார்கள்.
சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், பசுவுக்கு ஹாட்ஸ் அப் செய்து, கொடூர மனிதனை வார்த்தையால் கொத்தி தள்ளினார்கள். இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தொடர்ந்து, பலரும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்