Watch Video: வாவ்...அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி அட்ராசிட்டி செய்த பாட்டி...! வைரல் வீடியோ..!
அந்தக் காலத்தில் உட்கார்ந்தே வேலை பார்ப்பது குறைவு. கணினி இல்லை அதனால் ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லை, பக்கத்து கடைக்குக் கூட ஸ்கூட்டரில் செல்ல மாட்டார்கள்.அந்த இடமா ரெண்டு மைல் தான் என்று நடப்பார்கள்.
அட... எதுக்குமே வயசு ஒரு தடையே இல்லீங்க. இந்த வீடியோவைப் பார்த்தவுடன் பீடிகை வார்த்தைகள் எல்லாம் எழுதாமல் ஒரே வார்த்தையில் எதற்குமே வயது தடையில்லை என்று சொல்ல வைத்துவிடுகிறது.
ட்ரெண்ட்:
சமூக வலைதளங்களில் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் சந்தோஷ வீடியோ, சில நேரங்களில் மனதைக் கிழிக்கும் சோக வீடியோ, சில நேரங்களில் சமூக கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ இன்னும் சில நேரங்களில் அப்ப எனக்கும் பசிக்கும்ல என்று சிறு குழந்தை கொஞ்சும் வீடியோ. இப்படி வீடியோக்களுக்கு பஞ்சமில்லை. அப்படி ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
View this post on Instagram
அந்தரத்தில் சைக்கிள் ஓட்டும் மூதாட்டி:
அந்த வீடியோவில் 67 வயதான மூதாட்டி ஒருவர் அநாயசமாக கயிறு மீது சைக்கிள் ஓட்டுகிறார். அந்த வீடியோவில் அந்த மூதாட்டி, எனக்கு பயமேதும் இல்லை அகனே. நான் சைக்கிள் ஓட்டுகிறேன். நீ வேண்டுமானால் என்னுடன் வரலாம் எனக் கூறுகிறார். உண்மையில் அந்தக் காலத்து ஆட்களுக்கு இருக்கும் உடல் திடம் இப்போது 40களில் உள்ளவர்களுக்கே இல்லை.
40 வந்தால் சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் என மாத்திரை சாப்பிடும் காலகட்டமாகிவிட்டது. காரணம் அந்தக் காலத்தில் உட்கார்ந்தே வேலை பார்ப்பது குறைவு. கணினி இல்லை அதனால் ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லை, பக்கத்து கடைக்குக் கூட ஸ்கூட்டரில் செல்ல மாட்டார்கள். அந்த இடமா ரெண்டு மைல் தான் என்று நடந்து செல்வார்கள். ஃபாஸ்ட் ஃபுட் இல்லை. சிறு தானியங்கள் அதிகம். அரிசி உணவு குறைவு. இதனால் லைஃப் ஸ்டைல் நோய்கள் அவர்களை அண்டவில்லை.
ஆரோக்கியம்:
அதனால் அவர்களுக்கு நோயும் எளிதில் அண்டுவதில்லை. கோவிட் பெருந்தொற்று காலத்தில் 97 வயது நபர் கூட பிழைத்ததுண்டு. ஆனால்20, 30, 40களில் இருந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்த கதையும் உண்டு. கொரோனாவுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை என்றாலும் கூட ஒரு பெருந்தொற்றை சமாளிக்கு உடல் வலு அந்தக் கால மனிதர்களுக்கு உண்டு என்பதை ஒப்பீட்டு அளவில் சொல்லிக் காட்ட இதைப் பயன்படுத்தலாம்.
அது எவ்வளவு சரியான ஒப்பீடு என்பதை மஞ்சள் புடவையில் சரசரவென்று ரோப் சைக்கிளிங் செய்து கலக்கும் அந்த மூதாட்டியைப் பார்த்தால் நீங்களே மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஆமாம் என்று ஒப்புக் கொண்டு விடுவீர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்புறம் பாட்டி ஹெல்மெட், சேஃப்டி கியர் என்று ரொம்ப ஹைடெக்காகவும் உஷார் தான் போங்க!!!