Watch Video: பெரும் வேதனை! சுற்றுலா பயணிகள் பின்னால் காசுக்காக ஓடும் சிறுமிகள் - டெல்லியில் சோகம்
டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பின்னால் சாலையில் வசிக்கும் சிறுமிகள் பணத்திற்காக ஓடும் காட்சி மனதை பதைபதைக்க வைக்கிறது.
வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை அவர்கள் சுற்றிப்பார்ப்பதற்கான சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் டெல்லி முக்கியமான இடமாக உள்ளது. தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சுற்றிப்பார்ப்பதற்காக வருவார்கள்.
சுற்றுலா பயணிகள் பின்னால் ஓடும் சிறுமிகள்:
அந்த வகையில், வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் டெல்லிக்கு வருகை புரிவார்கள். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பணிநிமித்தமாகவும் ஏராளமானோர் டெல்லிக்கு வருவார்கள். இந்த சூழலில், டெல்லிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதி சுற்றிப்பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றுள்ளனர்.
டெல்லியில் சாலையோரங்களில் வீடற்றவர்கள் பலரும் குடும்பங்களாக தங்கியுள்ளனர். அவர்களில் ஆதரவற்ற குழந்தைகளும் தங்கியுள்ளனர். அவ்வாறு சாலையோரம் தங்கியுள்ள குழந்தைகளில் இரண்டு சிறுமிகள் ஆட்டோவில் செல்லும் அந்த வெளிநாட்டு தம்பதியினரை துரத்திச் செல்கின்றனர். அவர்களிடம் பணம் இருந்தால் கொடுக்குமாறு கேட்கின்றனர்.
Typical concern of every foreign tourist visiting Delhi, India. pic.twitter.com/l1Ihr39e1s
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 18, 2024
வேதனை:
ஒரு சிறுமி அந்த ஆட்டோ ரிக்ஷாவின் பின்னால் உள்ள பிடியைப் பிடித்து ஆபத்தான முறையில் நின்று பயணிக்கிறார். பயணித்துக் கொண்டே கையை நீட்டி அந்த வெளிநாட்டினரிடம் காசு கேட்கிறார். மற்றொரு சிறுமி மிக வேகமாக சாலையில் அந்த ஆட்டோவை துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்.
இந்த சிறுமிகள் பணத்திற்காக வெளிநாட்டினரிடம் கெஞ்சிக் கொண்டு ஓடிச்செல்வதை அந்த வெளிநாட்டு நபர் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும், இது பாதுகாப்பு அல்ல என்றும் அந்த வீடியோவில் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் வெளிநாட்டினரிடம் பணத்திற்காக இவ்வாறு கெஞ்சிக் கொண்டு துரத்திச் செல்வது பார்ப்பவர்கள் மனதை வேதனை அடைய வைத்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் குழந்தைகள் இப்படி சாலையில் ஆபத்தான முறையில் ஓடுவதும், அவர்களுக்கு முறையான கல்வி, தங்கும் வசதி, அவர்களின் பாதுகாப்பு குறித்தும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த குழந்தைகளின் கல்வி, தங்கும் வசதிகளுக்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: எத்தனை சிம்கார்டுகள் வச்சிருக்கீங்க? இனி சிறைதான்! புது சட்டம் கொண்டுவந்த அரசு! விதிகள் இதுதான்!
மேலும் படிக்க: Watch Video: சேட்டை! அந்தரத்தில் தொங்கி அட்ராசிட்டி செய்த சுட்டிக்குழந்தை - நீங்களே பாருங்க