Viral Video: இதெல்லாம் என்ன பிழைப்பு?.. ரயிலில் வியாபாரம் செய்த சிறுவனை ஏமாற்றிய நபர்!
இந்தியாவில் ரயில் பயணம் என்பது சாமானியர்களுக்கான போக்குவரத்து சாதனமாக திகழ்கிறது. நகரம் தொடங்கி இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை இணைக்கக்கூடிய வகையில் ரயில்வே துறை உள்ளது.

ரயிலில் பயணம் செய்த ஒருவர், நடைமேடையில் வியாபாரம் செய்த சிறுவனை ஏமாற்றிய சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பயணம்
இந்தியாவில் ரயில் பயணம் என்பது சாமானியர்களுக்கான போக்குவரத்து சாதனமாக திகழ்கிறது. நகரம் தொடங்கி இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை இணைக்கக்கூடிய வகையில் ரயில்வே துறை உள்ளது. இப்படியான ரயில்வேயில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், தேஜஸ் என பல வகைகளில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் முக்கிய நகரங்களில் மின்சார ரயில் சேவையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதே ரயில்களை நம்பி ஏராளமான சிறு வியாபாரிகளும் உள்ளனர். அவர்கள் ரயில்களின் உள்ளே மற்றும் வெளியே நடைமேடைகளில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதில் ஒரு சிறுவன் ரயில் நடைமேடையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறான். அவனிடம் பொருள் ஒன்றை வாங்கும் பயணி ஒருவர் பணம் தர தாமதிக்கிறார். இதனிடையே வியாபாரம் மும்முரமாக சென்று கொண்டிருக்க அந்த சிறுவன் பணம் கேட்கும் சமயத்தில் ரயில் புறப்படுகிறது. வேண்டுமென்றே பணம் கொடுக்க தாமதம் செய்த பயணி, ரயில் புறப்படும் வரை காத்திருந்து அந்த சிறுவனை ஏமாற்றும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.
அந்த சிறுவன் ரயில் புறப்பட்ட பின்னர் பணம் கேட்டு சிறிது ஓரம் ஓடி வந்து பின்னர் கடும் கோபம், இயலாமை ஆகியவை கொண்டு நம்மை கலங்க வைக்கிறார். இந்த சம்பவம் நடந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை சம்பந்தப்பட்ட ரயிலில் பயணித்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
For some it might be a few rupees
— D (@Deb_livnletliv) November 12, 2025
For him, it's for his family's Survival.
A young vendor seen sprinting
alongside a moving train pleading, crying just to get paid for what he sold ,while the passenger inside laughs it off refusing to pay.
This isn't fun but a Crime!… pic.twitter.com/lH9GRtuUxc
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் இதனை ஒரு பிழைப்பாக வைத்துள்ளனர். உங்களுக்கு வேண்டுமானால் இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதெல்லாம் தப்பு என சரமாரியாக கண்டித்துள்ளனர். இதுபோன்ற சிறு வியாபாரிகளுக்கு ஒவ்வொரு ரூபாயும் முக்கியம். அதனை வைத்து தான் அன்றாட வாழ்க்கை போராட்டங்களை அவர்களால் கடக்க முடியும். எனவே இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.




















