‛வாலை தொட்டதும்... சொல்லுங்க எஜமான்னு... வந்து நிக்கிற பாம்புனு நெனச்சியா... ’ -வைரல் வீடியோ !
பாம்பின் பின் பகுதியை பார்த்து சிறிய பாம்பு என்று நினைத்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பொதுவாக வீட்டு பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்துவிட்டால் அதை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினர் அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிப்பார்கள். அதுவே வீட்டிற்கு பாம்பு புகுந்துவிட்டது என்றால் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாம்பு பிடிக்கும் நபருக்கும் சில முறை மக்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில் பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பாம்பு ஒன்றை பிடிக்க போன இடத்தில் செய்த காரீயம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பாம்பை அதன் வாலை வைத்து எடைப்போடக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பாம்பு பிடிக்கும் நபர் முதலில் தன்வசம் இருக்கும் பொருளை வைத்து பாம்பை வெளியே இழுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் அவர் பாம்பின் வாலை பார்த்து அது சிறிய பாம்பு என்று முடிவு செய்து அந்த பாம்பை கையில் பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
Never Judge a snake by it's tail ?@Pendrive_Baba pic.twitter.com/ytet6ps7bg
— Jude David (@judedavid21) September 6, 2021
இறுதியில் அந்த பாம்பு முழுவதும் வெளியே வந்தவுடன் இவ்வளவு பெரிய பாம்பா என்று ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் அப்படியே பயந்து போகும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று தமிழ்நாட்டில் பெண் ஒருவர் வீட்டிற்கு புகுந்த பாம்பு ஒன்றை லாவகமாக பேசி வெளியேற்றிய வீடியோ ஒன்று மிகவும் வைரலானது. அந்த வீடியோவில் பெண் ஒருவர், பெண் ஒருவர், "நீ உன்னுடைய புற்றுக்கு போ நான் வந்து அங்கே பால் ஊற்றுகிறேன். எங்களை பார்க்கதான் வந்தியா. நாங்கள் நிச்சயம் வந்து உன்னுடைய புற்றில் பால் ஊற்றுகிறோம் நீ இப்போ செல்"எனக் கூறி பாம்பை தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேற்றும் காட்சி இடம்பெற்று இருந்தது.
Don’t know who this compassionate woman is but hats off to her for her handling of the snake with three Cs - Cool, Calm and collected. We need more people like her who respect wildlife 👍🙏#Respectwildlife vc-shared pic.twitter.com/ZLQAE3B3C3
— Supriya Sahu IAS (@supriyasahuias) September 6, 2021
இந்த வீடியோவை பதிவிட்டு செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ், "இந்த இரக்க குணம் அதிகம் உள்ள பெண்மணி யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருடைய செயலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஒரு பாம்பை எப்படி திறமையாக பொறுமையாக கையாள வேண்டும் என்பதை இவரிடம் இருந்து அனைவரும் கற்று கொள்ள வேண்டும். உங்களை போன்று வன விலங்குகளின் உயர்களை மதிக்கும் நிறையே பேர் நமது நாட்டிற்கு தேவை" எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க:மூட நம்பிக்கையின் உச்சம்: மழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக நடக்கவிட்ட கிராமம்!