ஒரே ஜம்ப்... விட்ட வேகத்தில் காட்டை நோக்கி ஸ்விம் செய்த டைகர்...! வைரலாகும் வீடியோ..
நாங்கள் வலை வேலிகளை வைத்தோம், ஆடுகளை தூண்டிலாக்கி பெரிய கூண்டுகளை நிறுவி பொரி வைத்து பார்த்தோம், ஆனால் அவை எதுவும் வேலை செய்யவில்லை.
சுந்தரவனக்காடுகள் புலிகள் காப்பகம் கடந்த வாரம் குமிர்மாரி கிராமத்திற்குள் நுழைந்த புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, டிசம்பர் 31 முதல் புலி பதுங்கியிருந்த 15 கிமீ தொலைவில் உள்ள கிளாஸ்காலி கிராமத்தின் பாதுகாப்பிற்காக வனத்துறை ஒரு குழுவை நியமித்தது. வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியோ மாலிக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இரண்டு ஈட்டிகளால் புலியை தாக்கிய பிறகு இரவு 11:15 மணியளவில் அதனை அடக்கினோம் என்றார். மேலும், "புலி காலையில் அப்பகுதிக்குள் நுழைந்து ஏராளமான வனத்துறை ஊழியர்களுடன் கண்ணாமூச்சி விளையாடியது. நாங்கள் வலை வேலிகளை வைத்தோம். ஆடுகளை தூண்டிலாக்கி பெரிய கூண்டுகளை நிறுவி பொரி வைத்து பார்த்தோம். ஆனால் அவை எதுவும் வேலை செய்யவில்லை," என்று அவர் கூறினார்.
Squirrel Attack in Britain: அணிலை கருணை கொலை செய்த அரசு... ஏன் தெரியுமா?
Watch Video: ஆதரவில்லாமல் தெருவில் தங்கியவரை அணைத்துகொண்ட நாய்.. வைரலாகும் அன்பு வீடியோ..!
Watch Video: “கொஞ்சம் இருங்கப்பா” - நடுவரிடம் மன்னிப்பு கேட்ட புது கேப்டன் கே.எல்.ராகுல்
"குமிர்மாரி சம்பவம் பாக்னா ரேஞ்ச் அலுவலகத்திற்கு மிக அருகில் நடந்தது. கிளாஸ்காலியில் நுழைந்த வேறொரு புலியை பிடிக்க ஊழியர்கள் தயாராகிக்கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் அவர்களுக்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக மற்றொரு குழுவை குமிர்மாரிக்கு மாற்றினோம். புலியை பீட் அதிகாரி உத்தம் பிஸ்வாஸ் அமைதிப்படுத்தினார். இரவு 10 மணியளவில் இரண்டு ஈட்டிகள் கொண்டு தாக்கப்பட்டு கூண்டுக்குள் பிடிக்கப்பட்டது" என்று வனத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
#Video: Royal Bengal Tiger Released In #Sunderbans pic.twitter.com/DL4zSk6zr8
— Victor DG (@dasgupta_victor) January 3, 2022
பிடிபட்ட புலியை வனத்துறையினர் சுந்தரவன காடுகளில் கொண்டு சென்று விடுவதற்காக, கப்பலில் கூண்டை ஏற்றி எடுத்து சென்றிருக்கிறார்கள். அங்கு காட்டை அடைந்ததும் சிறிய கதவை திறக்கிறார்கள். கதவை திறந்ததும் புலி ஒரு பாய்ச்சல் பாய்ந்து தண்ணீரில் குதிக்கிறது. குதித்த புலி காட்டை நோக்கி வேகமாக நீச்சல் அடிக்கிறது. காட்டை கண்ட சந்தோஷத்தில் பாய்ந்து பாய்ந்து நீச்சல் அடித்து கரையை தொட்டதும் துள்ளி குதித்து காடுகளுக்குள் ஓடியது. குதித்து குதித்து ஓடிய புலி காடுகளுக்குள் சென்று மறைந்தது. இதுகுறித்த வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.