Watch Video: வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி.. ஹோசானா பாடலுக்கு நடனமாடும் நாய் - வைரல் வீடியோ !
நாய் ஒன்று நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோ பலரையும் கவரும். அதிலும் குறிப்பாக அந்த வீடியோ விலங்குகள் செய்யும் சேட்டை காட்சிகள் இருந்தால் அது நிச்சயம் வைரல் தான். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் சிலர் நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுடன் நாய் ஒன்று வந்துள்ளது. அந்த நாய் அவர்கள் ஆடுவதை பார்த்து அதுவும் தன்னுடைய பங்கிற்கு சில நடன அசைவுகளை செய்கிறது. அவர்கள் அனைவரும் ஹோ சானா பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். அந்தப் பாட்டில் வரும் இசைக்கு ஏற்ப அந்த நாய் நடனமாடுவது பலரையும் கவர்ந்துள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவை பலரும் கவர்ந்து வந்துள்ளது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் அந்த வீடியோ இன்று எங்களுடைய நாளை அழகாக மாற்றியுள்ளது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்