Watch Video: ஜூஸ் வேணுமா? சைக்கிள் மிதிங்க.. கொஞ்சம் சைக்கிளிங் நிறைய பழச்சாறு.. அசத்தும் ஜூஸ் கடை!
பழச்சாறு கடை ஒன்றில் சைக்கிளிங் செய்து கொண்டே ஒருவர் பழச்சாறு தயாரிக்கும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு வித்தியாசமான கடைகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு புதிய வகையான கடை தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு கடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல விதமான ஒரு உடற்பயிற்சி காத்திருக்கிறது. அது என்ன?
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் ஒரு பழச்சாறு கடை ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பழச்சாறை தயார் செய்யும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது தங்களுக்கு வேண்டிய பழச்சாறை தயார் செய்ய அவர்கள் சைக்கிள் போன்ற ஒரு இயந்திரத்தை ஓட்ட வேண்டும். அவர்கள் அந்த சைக்கிளை ஓட்டும் போது அந்த மிக்ஸியிலிருந்து சாறு வருகிறது. அதன்பின்னர் அந்த பழச்சாறை நாம் பருகி கொள்ளலாம்.
மேலும் இந்தக் கடையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இருக்க இதுபோன்ற நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி இங்கு பழச்சாறு பரிமாரப்படுகிறது. இந்த அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள ‘க்ரீன்நோபார்’ என்ற கடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
View this post on Instagram
இந்தக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய பழச்சாறை தயாரிப்பது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மோஹித் என்பவர் தனக்கு தேவையான தர்பூசணி பழச்சாற்றை தயாரிக்கிறார். அவர் சைக்கிளிங் செய்யும் போது பழச்சாறு வெளியே வருகிறது. இந்த வீடியோவை பதவிட்டு நல்ல உடற்பயிற்சியுடன் ஒரு பழச்சாறு என்று கூறியுள்ளனர். அந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: பண்ணைவீட்டில் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்தது.. மருத்துவமனையின் சேர்க்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..