"அவங்க கிட்ட தெய்வீகத்த பாக்குறேன்" மாற்றுத்திறனாளிகள் குறித்து நெகிழ்ந்து பேசிய துணை ஜனாதிபதி!
மாற்றுத்திறனாளிகளிடம் தெய்வீகத்தைக் காண்கிறேன். உன்னதத்தைக் காண்கிறேன். ஆன்மீகத்தைப் பார்க்கிறேன் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
"உலகில் நமது நாகரிகம் தனித்துவமானது. 5000 ஆண்டுகளுக்கும் மேலானது. அது எதைப் பிரதிபலிக்கிறது, மாற்றுத்திறனாளிகளிடம் நாம் தெய்வீகத்தைக் காண்கிறோம். நாம் உன்னதத்தைக் காண்கிறோம். ஆன்மீகத்தைப் பார்க்கிறோம்" என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் நெகிழ்ச்சி:
டெல்லி தியாகராஜர் விளையாட்டரங்கில் சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் போக்கே மற்றும் பந்துவீச்சு போட்டியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் துணைத் தலைவர் தன்கர், "விளையாட்டுகளின் மூலம், நாம் மிக முக்கியமான ஒன்றைக் கொண்டாடுகிறோம்.
அது, ஆசியா பசிபிக் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கமும் கண்ணியமும். இது இந்தியாவின் கலாச்சார நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. சிறப்பு ஒலிம்பிக் உலகளாவிய உள்ளடக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது" என்றார்.
நாட்டின் இளைஞர்களின் டிஜிட்டல் மோகம் குறித்து கவலை தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், "இந்த சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான கவலையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது மிகவும் முக்கியமானது.
"ரொம்ப கவலையா இருக்கு"
இது கவலையளிக்கும் வகையில் உள்ளது. இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், நமது இளைஞர்களும், குழந்தைகளும் சிறிய திரைகளான செல்போன்களை பார்ப்பதால், அவர்கள் உண்மையான விளையாட்டு மைதானங்களிலிருந்து விலகி டிஜிட்டல் விளையாட்டு மைதானங்களுக்குள் தள்ளப்படுகிறார்கள்.
Hon’ble Vice-President, Shri Jagdeep Dhankhar presided as Chief Guest at the opening ceremony of Special Olympics Asia Pacific Bocce & Bowling Competition in New Delhi today. @mansukhmandviya @SOlympicsBharat @DrMallikaNadda @MPNaveenJindal #SpecialOlympics pic.twitter.com/7e1Hlc5MxR
— Vice-President of India (@VPIndia) November 19, 2024
இந்த சிறிய பிளாஸ்டிக் திரையால் குழந்தைகளுக்கு உண்மையான விளையாட்டு மைதானங்கள் கிடைக்காமல் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த டிஜிட்டல் ஆவேசத்தால் குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறைக்கு உண்மையான விளையாட்டு மைதானத்தின் சிலிர்ப்பை, உற்சாகத்தை, அறிவொளியை பறிக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்" என்றார்.
இதையும் படிக்க: Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்