"வேறு எந்த நாட்டிலும் இல்லாத கருத்து சுதந்திரம்" பெருமிதத்துடன் சொன்ன ஜெகதீப் தன்கர்
அனைவரையும் அரவணைத்து செல்வதும் கருத்துச் சுதந்திரமும் நமது சிந்தனை மரபில் உள்ளது என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

"இந்தியா, உலகின் பழமையான நாகரிகத்தை கொண்டது. அனைவரையும் அரவணைத்து செல்வதும் கருத்துச் சுதந்திரமும் நமது சிந்தனை மரபு" என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
"மரபில் உள்ள கருத்து சுதந்திரம்"
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் "வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேளாண் கல்வி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பது" என்ற கருப்பொருளில் பேசிய குடியரசு துணைத்தலைவர், "நமது நாகரிகத்தில் அனைவரையும் அரவணைத்தல் மற்றும் கருத்து சுதந்திரம் செழித்து, மலர்ந்து, மதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில், கருத்து வெளிப்பாடு மற்றும் அரவணைத்தலின் விகிதாச்சாரமும் சார்பும் உலகிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது. அனைவரையும் அரவணைத்தல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நிரூபிக்க இந்தியாவைப் போல் வேறு எந்த நாடும் இல்லை.
மிகப்பெரிய ஜனநாயகம், பழமையான ஜனநாயகம், மிகவும் துடிப்பான ஜனநாயகம் ஆகிய இந்த மாபெரும் தேசத்தின் குடிமக்களாக, கருத்துச் சுதந்திரமும் அரவணைத்தலும் நமது தேசிய சொத்துக்களாக மாற வேண்டும்" என்றார்.
குடியரசு துணைத்தலைவர் என்ன பேசினார்?
வேளாண் துறை பற்றிப் பேசிய குடியரசு துணைத்தலைவர், "நாம் உணவுப் பாதுகாப்பிலிருந்து விவசாயிகளின் செழிப்புக்கு நகர வேண்டும். விவசாயி வளமாக இருக்க வேண்டும். இந்தப் பரிணாமம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிலிருந்து தோன்ற வேண்டும்.
விவசாயிகள் விவசாய நிலங்களை விட்டு வெளியேறி, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் வெறும் உற்பத்தியாளராக இருந்து சந்தையை மறந்துவிடக் கூடாது. அதாவது அவர்கள் கடினமாக, சளைக்காமல் ஒரு விளைபொருளை சேகரித்து, சந்தைக்கு ஏற்ற நேரம் வரை வைத்திருக்காமல் விற்பனை செய்வார்கள். இது பொருளாதார ரீதியாக அதிக லாபம் தராது.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அரசு கூட்டுறவு அமைப்பு மிகவும் வலுவானது என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பதன் மூலமும் விவசாயிகளை மேம்படுத்த வேண்டும். முதல் முறையாக, கூட்டுறவு அமைச்சர் நம்மிடம் உள்ளார். கூட்டுறவுகள் நமது அரசியலமைப்பில் இடம் பெறுகின்றன. எனவே, நமக்குத் தேவை விவசாய வர்த்தகர்கள். நமக்குத் தேவை விவசாய தொழில்முனைவோர். அந்த மனநிலையை உருவாக்குங்கள்.
இதனால் ஒரு விவசாயி தன்னை உற்பத்தியாளரிலிருந்து மதிப்பு கூட்டுபவராக மாற்றிக்கொண்டு, குறைந்தபட்ச உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சில தொழில்களைத் தொடங்குவர். நமது நாட்டில் உரங்களுக்கு மிகப்பெரிய மானியம் உள்ளது. விவசாயி நலனுக்காக உரத் துறைக்கு தற்போது வழங்கப்படும் மானியம் நேரடியாக விவசாயிக்குச் சென்றால், ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 ரூபாய் பெறுவார்" என்றார்.





















