UttarPradeshElections2022: உத்தரப்பிரதேசம்: தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு - கொட்டும் பனியில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்
11 மாவட்டத்தில் 58 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் கடந்த முறை பாஜக 53 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பனி அதிகமாக இருக்கும் நிலையிலும் மக்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்ற நிலையில் 2.27 கோடி பேர் வாக்களிக்க இருக்கின்றனர். 403 சட்டப்பேரவை தொகுதி கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 11 மாவட்டத்தில் 58 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் கடந்த முறை பாஜக 53 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Voters brave cold to arrive early to exercise their franchise at polling booth number 50-51 in Goverdhan Assembly constituency of Mathura during the first phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/ZausYBX7Xr
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே போட்டி நிலவுகின்றன. 58 இடங்களுக்கு மொத்தம் 623 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் பாஜக, பிஎஸ்பி, எஸ்பி-ஆர்எல்டி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என தலா 58 பேர் அடங்குவர். மதுரா, தானா பவன், முசாபர்நகர், நொய்டா, கைரானா, பாக்பத் மற்றும் அட்ராலி ஆகிய முக்கிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. முக்கிய வேட்பாளர்கள் பங்கா சிங், சுரேஷ் ராணா, மிருகங்கா சிங், சந்தீப் சிங் (மறைந்த கல்யாண் சிங்கின் பேரன்), ஸ்ரீகாந்த் சர்மா, அகமது ஹமீத் மற்றும் கபில் தேவ் அகர்வால்.
Muzaffarnagar: People queue up at the polling booth in Purva Madhyamik Kanya Vidyalaya, Kutbi as they await their turn to cast vote in the first phase of #UttarPradeshElections pic.twitter.com/botYpT3tlN
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
முதல் கட்ட வாக்குப்பதிவில், சுரேஷ் ராணா, அதுல் கர்க், ஸ்ரீகாந்த் சர்மா, சந்தீப் சிங், அனில் சர்மா, கபில் தேவ் அகர்வால், தினேஷ் காதிக், டாக்டர் ஜி எஸ் தர்மேஷ் மற்றும் சவுத்ரி லக்ஷ்மி நரேன் ஆகிய ஒன்பது அமைச்சர்களின் தலைவிதி முடிவு செய்யப்படும்.
அரசியல் கட்சிகள் தங்கள் முக்கிய வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஒவ்வொரு கட்சியும் இலவசங்களை வாக்குறுதி அளித்துள்ளன.