Watch Video : என்னிடத்தில் சகோதரிகள் உள்ளனர் - 'தீவார்' படத்தை நியாகப்படுத்திய பிரியங்கா காந்தி
வறுமை, தரம்தாழ்ந்த வாழ்க்கை முறை, சுரண்டல் முதாளைத்துவம் ஆகியவற்றால் கோபம் கொண்டவனாக வரும் அமிதாப் பச்சன் உலகை பழிவாங்கவும், வெல்லவும் முயற்சிப்பார்
![Watch Video : என்னிடத்தில் சகோதரிகள் உள்ளனர் - 'தீவார்' படத்தை நியாகப்படுத்திய பிரியங்கா காந்தி UP election 2022 i have sisters Priyanka Gandhi recalls iconic movie dialogue to counter critics in Uttar Pradesh Watch Video : என்னிடத்தில் சகோதரிகள் உள்ளனர் - 'தீவார்' படத்தை நியாகப்படுத்திய பிரியங்கா காந்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/438888e0a92792440466b96aa6125123_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தர பிரதேசத்தில் பெண் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை முன்வைத்து தனது தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை தனது நிலைப்பாட்டை தீவார் படத்தின் ரவி கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
1970களில் சமூக நீதி சார்ந்த திரைப்படங்கள் இந்தி சினிமாவை இறுகப்பற்றிக் கொண்டிருந்தன. அதில், மிக முக்கியமான திரைப்படம் தீவார். அமிதாப் பச்சன், சசி கபூர் ஆகியோர் சகோதரர்களாக நடித்த இத்திரைப்படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
मेरे पास बहनें हैं…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 22, 2021
बहनें राजनीति में बदलाव लाएंगी।#लड़की_हूं_लड़_सकती_हूं pic.twitter.com/v2uVpsO1wA
அன்பும் நிறைந்து ஆனால் கருத்து வேறுபாடு கொண்ட சக்கோதர்கள், அவர்களின் பிரிவு இப்படத்தின் மையப்பொருளாக இருக்கும். இதில், சமூ நீதி மறுக்கப்பட்ட கதாநாயகனாக அமிதாப்பச்சன் நடித்திருப்பார். வறுமை, தரம்தாழ்ந்த வாழ்க்கை முறை, சுரண்டல் முதாளைத்துவம் ஆகியவற்றால் கோபம் கொண்டவனாக வரும் அமிதாப் பச்சன் உலகை பழிவாங்கவும், வெல்லவும் முயற்சிப்பார்.
விஜய் (அமிதாப் பச்சன்) வழி தவறிய மனிதாகவும், தாயின் ஆதரவைப் பெற்ற ரவி (சசி கப்பூர்) இதர மனிதர்களை திருத்துபவனாகவும் வாழ்கின்றனர். படத்தின் ஒரு கட்டத்தில், அமிதாப் பச்சன், சசி கப்பூருடன் ..... நான் காரி வைத்திருக்கிறேன், மாளிகை வீடு வைத்திருக்கிறேன் என்று கூறுவார். அதற்கு, "எனக்கு என் தான் துணையாக நிற்கிறார்" என்று சசி கப்பூர் பதிலளிப்பார்.
அத்தகையைப் பதிலையே, பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி தெரிவித்திருக்கிறார். முன்னதாக, பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, " பெண்களே நீங்கள் போராடுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். காங்கிரஸ் உங்களுடன் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாம் அனைவரும் இணைந்து இந்த நாட்டிற்கும் மாநிலத்திற்கும் உணர்த்துவோம் பெண்கள் மறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று" என்று தெரிவித்தார்.
அமேதியுடனான எங்கள் தொடர்பு நீண்ட நாளையது.
— Priyanka Gandhi Vadra - Tamil Commentary (@PGV_TN) December 18, 2021
இந்த இணைப்பு அன்புக்கும் உண்மைக்குமானது.
இந்த இணைப்பு உணர்வுப்பூர்வமானது. அரசியலுக்கானது மட்டும் அல்ல.
அமேதி மக்களே பிஜேபிக்கு எதிரான கொந்தளிப்புக்கும், உங்கள் அன்புக்கும் நன்றி. pic.twitter.com/HEfpPn0Hi0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாராகும் முனைப்பில் தற்போது இருந்தே இறங்கியுள்ளது. இதற்காக அம்மாநில கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி களத்தில் உள்ளே இறங்கியுள்ளார். மேலும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)