கதற கதற லத்தியால் அடி! 9 பேரை கொடூரமாக தாக்கிய போலீஸ்! பதறவைக்கும் வீடியோ!
ஒன்பது பேரை காவல்துறையினர் கொடூரமாக தாக்குவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது பேரை இரண்டு காவல்துறையினர் தடியை கொண்டு கொடூரமாக தாக்குகின்றனர். அதை அவர்கள் தடுக்க முயல்கின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடம் காவல் நிலையம் போல தெரிகிறது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ட்விட்டரில் பகிர்ந்த உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ ஷாலாப் மணி திருப்பதி, "இது கலவரக்காரர்களுக்கான பரிசு" என பதிவிட்டுள்ளார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காவல்துறையினரின் கொடூரம் தொடர்ந்துவருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு
முன்னாள் பத்திரிகையாளரான திருப்பதி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகராக இருந்துள்ளார். இந்த சம்பவம் எப்போது எங்கு நடைபெற்றது என்பதை திருப்பதி குறிப்பிடவில்லை. பாஜக நிர்வாகிகள் இருவர், முகமது நபி குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை பெரும் போராட்டம் வெடித்தது. கலவரமாக பரவியது. இதை தொடர்ந்து, சஹாரன்பூரில் உள்ள காவல்நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இம்மாதிரியான சம்பவங்களால் பாதிக்கப்படுகிறது என உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இதுபோன்ற காவல் நிலையங்களைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்... காவல்நிலைய மரணங்களில் உ.பி., முதலிடத்தில் உள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் தலித்துகள் மீதான துஷ்பிரயோகங்களிலும் முன்னணியில் உள்ளது" என்றார்.
Will these criminals in uniform be held liable for this brutality? pic.twitter.com/8X4AVEaYms
— Prashant Bhushan (@pbhushan1) June 11, 2022
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரை வெள்ளிக்கிழமையன்று நடந்த போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்பாக காவல்துறை கைது செய்துள்ளது. சமூகத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சஹாரன்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்