மேலும் அறிய

அசாதாரணமான துணிச்சல்.. ASP வந்திதா பாண்டே உள்பட தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் விருது!

வந்திதா பாண்டே (ஏஎஸ்பி), எம். அம்பிகா (ஆய்வாளர்), கே. மீனா (எஸ்பி), என். உதயகுமார் (ஆய்வாளர்) உள்பட 8 பேர் 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' பெறுகின்றனர்.

பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/ மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்)/ மத்திய காவல் அமைப்பு (சிபிஓ) ஆகியவற்றின் 463 பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான  'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்'  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் விருது:

சிறந்த பணியை அங்கீகரிப்பதற்கும், உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், பின்வரும் நான்கு துறைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர் / அதிகாரிகளின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இந்தப்  பதக்கம் வழங்கப்படுகிறது:

(i) சிறப்பு  நடவடிக்கை.

(ii) புலனாய்வு.

(iii) நுண்ணறிவு.

(iv) தடய அறிவியல்.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல் படி, தொடங்கப்பட்ட 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' அனைத்து காவல்துறையினரின் மன உறுதியை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' 2024, கடந்த பிப்ரவரி 1 தேதியிட்ட உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டது. காவல் படைகள், பாதுகாப்பு அமைப்பு, புலனாய்வு பிரிவு / கிளை / மாநிலத்தின் சிறப்புப் பிரிவு / யூனியன் பிரதேசங்கள் / சிபிஓக்கள் / சிஏபிஎஃப் கள் / தேசிய பாதுகாப்பு   காவலர் (என்எஸ்ஜி) / அசாம் ரைபிள்ஸ் உறுப்பினர்கள், தடய அறிவியல் (மத்திய/மாநில / யூனியன் பிரதேசங்கள்) ஆகிய துறைகளில் சிறப்பான செயல்பாடுகள், புலனாய்வில் சிறப்பான சேவை, அசாதாரணமான செயல்திறன் மற்றும் துணிச்சலான புலனாய்வு சேவை, தடய அறிவியல் துறையில் பணியாற்றும் அரசு விஞ்ஞானிகளின் பாராட்டத்தக்க பணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

வந்திதா பாண்டேவுக்கு விருது:

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி, அதாவது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இப்பதக்கம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வுப் பிரிவில் 7 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்திதா பாண்டே (ஏஎஸ்பி), எம். அம்பிகா (ஆய்வாளர்), கே. மீனா (எஸ்பி), என். உதயகுமார் (ஆய்வாளர்), சி. கார்த்திகேயன் (ஏசிபி), நல்லசிவம் (ஏசிபி), எஸ். பாலகிருஷ்ணன் (ஆய்வாளர்) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தடயஅறிவியல் பிரிவில் சுரேஷ் நந்தகோபால் (துணை இயக்குநர்) என 8 பேர் 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' பெறுகின்றனர். விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் https://www.mha.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget