Republic Day : 73வது குடியரசுதின கொண்டாட்டம்..! மறைந்த தலைவர்களின் மறக்கக்கூடாத வாழ்த்துகள்..!
நாட்டின் 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில், மறைந்த தலைவர்கள் தெரிவித்த வாழ்த்துகளை மீண்டும் நினைவூட்டிப்பார்க்கலாம்.
![Republic Day : 73வது குடியரசுதின கொண்டாட்டம்..! மறைந்த தலைவர்களின் மறக்கக்கூடாத வாழ்த்துகள்..! unforgettable republic day wish from indian leaders and freedom fighters Republic Day : 73வது குடியரசுதின கொண்டாட்டம்..! மறைந்த தலைவர்களின் மறக்கக்கூடாத வாழ்த்துகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/b8723190cb90c5c27a4147688441a41b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாட்டு மக்களுக்கு ஏபிபி நாடு சார்பாக குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு தலைவர்கள் தெரிவித்து வாழ்த்துகளை கீழே காணலாம்.
இந்திரா காந்தி :
ஒரு வேளை எனது உயிர் நாட்டின் சேவையின்போது உயிரிழந்தால், நான் மிகவும் பெருமைப்படுவேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பதுடன் நாட்டை வலுவாகவும், பலமானதாகவும் மாற்ற உதவும்.
சுவாமி விவேகானந்தர் :
உழவர்களின் கலப்பையை பிடித்துக்கொண்டு குடிசைகளில் இருந்தும், செருப்புத் தொழிலாளர்களிடமிருந்தும், துப்புரவுத் தொழிலாளர்களிடம் இருந்தும் புதிய இந்தியா எழட்டும்.
அம்பேத்கர் :
ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் மட்டுமல்ல. இது முதன்மையாக தொடர்புடைய வாழ்க்கை முறை இணைந்த தொடர்பு அனுபவம். இது அடிப்படையில் சக மனிதர்களுக்கு மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறை ஆகும்.
சர்தார் வல்லபாய் படேல் :
ஒவ்வொரு இந்தியனும் தான் ஒரு ராஜபுத்திரன் என்பதை இப்போது மறந்து வருகிறார்கள். சீக்கியரோ அல்லது ஜாட்டோ, அவன் தான் ஒரு இந்தியன் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
பகத்சிங் :
மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடாக இருக்கும் வரைதான் சட்டத்தின் புனிதம் காக்கப்படும்
இது மட்டுமின்றி, குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின வாழ்த்துகள் சமூக வலைளதங்களில் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்,
நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுப்போம்.
உங்கள் சுதந்திரத்தை அனுபவியுங்கள். ஆனால், நமது தலைவர்கள் செய்த பல தியாகங்களை மதிக்கவும். குடியரசு தின வாழ்த்துகள்.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, உண்மையான அர்த்த்தில் நாம் சுதந்திரம் பெற்றோம். அந்த நாளை மதிப்போம்.
நம் இதயங்களில் நம்பிக்கையுடனும், எண்ணங்களில் சுதந்திரத்துடனும், தேசத்திற்கு வணக்கம் செலுத்துவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)