மேலும் அறிய

சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்ட நெரிசல்! புதிய பாடல்கள் ஒலிபரப்பு: தேவசம் போர்டின் அதிரடி முடிவு!

சபரிமலையில் புகழ்பெற்ற பாடல்களுடன் அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில், சாமானிய பக்தா்களின் புதிய பாடல்களும் ஒலிபரப்பாகும் - தேவசம் போர்டு அறிவிப்பு

சபரிமலை மகர ஜோதி  வழி​பாட்​டில் இது​வரை இல்​லாத அளவுக்கு கட்​டுக்​கடங்​காத கூட்​டம் திரண்​ட​தால் நேற்று பெரும் நெரிசல் ஏற்​பட்​டது. குடிநீர், கழிப்​பிடம் உள்​ளிட்ட அடிப்​படை தேவை​களுக்கு பக்​தர்​கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.  8 மணி நேரத்​துக்கும் மேல் காத்​திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்​தனர்.

சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்ட நெரிசல்! புதிய பாடல்கள் ஒலிபரப்பு: தேவசம் போர்டின் அதிரடி முடிவு!

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. இது​வரை சுமார் 6.5 லட்​சம் பக்​தர்​கள் தரிசனம் செய்துள்ளனர்.  உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் கடந்த 2 நாட்​களாகவே அதி​கரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் நேற்று இருந்​தது. எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோயில், மரக்​கூட்​டம், அப்​பாச்​சிமேடு, பெரிய நடைப்​பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் இருந்​தது. குறிப்​பாக சன்னி​தானத்​தில் இருந்து மரக்​கூட்​டம் வரை ஒதுங்​கக்​கூட இடம் இல்​லாத நிலை​யில் நெரிசல் ஏற்​பட்​டது. மேலும் பம்பை பாலத்​தின் தொடக்​கத்​தில் இருந்து திரு​வேணி சங்கமம், கணபதி கோயில் ​வா​யில் வரை நெரிசல் ஏற்​பட்​டது.

இரு​முடி​யுடன் 8 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருந்து சன்னிதானத்தை அடை​யும் நிலையே நேற்று இருந்​தது. இதனால் குடிநீர், கழிப்​பிடம், உணவுக்கு பக்​தர்​கள் சிரமப்​பட்​டனர். இலவச குடிநீர் வழங்​கப்​படு​வதும் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால் பக்தர்கள் பரிதவித்தனர். அளவுக்கு மீறிய கூட்​டத்தைகட்​டுப்​படுத்​துவது காவல்​துறை,சிறப்பு அதிரடிப்​படை​யினருக்கு பெரும் சவாலாக உள்​ளது. ஸ்பாட் புக்​கிங்கை குறைத்து கூட்​டத்தை முறைப்​படுத்தி அனுப்​பி​னால்​தான் ஐயப்​பனை சிரமமின்றி தரிசிக்க முடி​யும் என்று பக்​தர்​கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

இந்த நிலையில், குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி சாதாரண பக்தா்கள் தாங்களே எழுதி, இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்களையும் ஒலிபரப்ப திருவிதாங்கூா் தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இதுவரை சபரிமலை சன்னிதானத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜெயவிஜயா போன்ற புகழ்பெற்ற பாடகா்கள் பாடிய பாடல்கள் மட்டுமே ஒலிபெருக்கி வழியாக இசைக்கப்பட்டு வருகின்றன.

அதிகாலையில் நடை திறக்கும்போது யேசுதாஸின் ‘வந்தே விக்னேஸ்வரம்’ மற்றும் இரவு நடை அடைக்கும்போது ‘ஹரிவராசனம்’ பாடல்களும், பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கும்போது ஜெயவிஜயாவின் ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடலும் இசைக்கப்படுகிறது. பக்தா்களின் ஆன்மிக பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவா்கள் உருவாக்கிய புதிய பாடல்களையும் இனி ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்க தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற பாடல்களுடன் அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில், சாமானிய பக்தா்களின் புதிய பாடல்களும் ஒலிபரப்பாகும்.

சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்ட நெரிசல்! புதிய பாடல்கள் ஒலிபரப்பு: தேவசம் போர்டின் அதிரடி முடிவு!

பாடல்களை சன்னிதானத்தில் உள்ள தேவசம் அதிகாரியிடம் பக்தா்கள் நேரடியாக வழங்கலாம். பக்தா்கள் சமர்ப்பிக்கும் பாடல்கள் சொந்தமாக இயற்றப்பட்டதாகவும், இசையமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பாடலாசிரியா், இசையமைப்பாளா், பாடகா் ஆகிய மூவரும் இணைந்து, சமா்ப்பிக்கப்படும் பாடலானது தங்களின் சொந்த முயற்சி என்றும், இதற்கு வேறு எவரும் காப்புரிமை கோர முடியாது என்றும் உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். பக்தா்கள் சமா்ப்பிக்கும் அனைத்துப் பாடல்களும் தரம் மற்றும் ஆன்மிக கருத்துகளின் அடிப்படையில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். தகுதியான பாடல்கள் தோ்வு செய்யப்பட்டு, சபரிமலையின் அதிகாரபூா்வ ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget