Uber Bus: ஆபீஸ் போறதுக்கு கஷ்ட படுறீங்களா? விரைவில் பஸ் சேவை...அரசுடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம்!
இந்தியாவில் கொல்கத்தா பகுதியில் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Uber Car: இந்தியாவில் கொல்கத்தா பகுதியில் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கால் டாக்ஸி சேவை
நாட்டில் பல்வேறு நகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் கால் டாக்ஸி சேவை வழங்கி வருகின்றனர். சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு நகரகளில் வாடகை ஆட்டோ, கார், பைக் என அனைத்தும் இயங்கி வருகிறது. ஆன்லைன் செயலி மூலமாக முன்பதிவு செய்தால் நினைத்த இடத்தில் இருந்து நினைத்து இடத்தில் சென்றடைய முடியும்.
மெட்ரோ நகரங்களாக இருக்கும் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஊபர், ஒலா போன்ற நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி வாடகை கார்கள், ஆட்டோக்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
பேருந்து சேவையில் ஊபர் நிறுவனம்:
இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஊபேர் நிறுவனம் பேருந்து சேவையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கொல்கத்தாவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் முதல் இந்த சேவை கொல்கத்தாவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக மேற்கு வங்க போக்குவரத்து துறையுடன் ஊபர் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
ஊபர் ஷட்டில் (Uber Shuttle) என இந்த பேருந்து சேவைக்கான ஒப்பந்தம் நேற்று நடைபெற்ற வர்த்தக உச்ச மாநாட்டில் கையெழுத்தானது. வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அலுவலகம் வரைக்கும் பேருந்திலேயே பயணிக்கும் வகையில் இந்த சேவை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பேருந்து முழுவதும் ஏசி வசதி கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 60 பேருந்துகளை இயக்க ஊபர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
60 குளிர்சாதன பேருந்துகள்:
ஊபர் பேருந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவை கிடைக்கும் என்று ஊபர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 பேர் வரை அமரும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த பேருந்துகள் முன்கூட்டிய வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் இயக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து நகரின் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும். அலுவலகத்திற்கு செல்பவர்களை கவரும் வகையில், ஊபர் நிறுவனம் பேருந்து சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஊபர் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "ஊபர் நிறுவனம் ஷட்டில் பேருந்து சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொல்கத்தாவில் அறிமுகமாக உள்ளது. வரும் காலங்களில் பேருந்துகள் எண்ணிக்கையும், இயக்கப்படும் வழித்தடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஊபர் செயலி மூலமே முன்பதிவு செய்து கொள்ளலாம். 2025ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஊபர் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.