மேலும் அறிய

கொதிக்கும் தண்ணீரில் தவமிருக்கும் சிறுவன்.. வைரல் வீடியோவின் பின்னணி அறிவியல் என்ன?

தண்ணீர் நிறைந்த வாணலிக்குள் சிறுவன் அமர்ந்திருப்பதும், கீழே நெருப்பு வைக்கப்பட்டு, தண்ணீர் கொதிப்பது போலவும் வீடியோ ஒன்று வெளியானது. இது குறித்த அறிவியலைப் பகிரத் தொடங்கியுள்ளனர் ட்விட்டர்வாசிகள்.

ட்விட்டரில் வீடியோ ஏதாவது வினோதமாக வெளிவந்தால் ட்விட்டர்வாசிகள் அதன் உண்மைத்தன்மையைப் புலனாய்வு செய்வதும், அதன் மீது விவாதங்கள் செய்வதும் வழக்கமான ஒன்று. சமீபத்தில் தண்ணீர் நிறைந்த வாணலிக்குள் கைகூப்பியபடி சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதும், கீழே நெருப்பு வைக்கப்பட்டு, தண்ணீர் கொதிப்பது போலவும் வீடியோ ஒன்று வெளியானது. அந்தச் சிறுவனைச் சுற்றி சிறிய கூட்டம் ஒன்று இருப்பது போலவும், அதனைக் கண்டுகொள்ளாமல் சிறுவன் வழிபாட்டில் இருப்பது போலவும் அந்த வீடியோவில் காட்டப்படுகிறது. சிறுவனுக்குப் பின்னால் உள்ள பேனரில் இந்தி மொழியில் ‘பிரகலாத்’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் பலரும் வீடியோ எடுப்பதாகவும் தெரிகிறது. 30 செகண்ட்கள் ஓடும் இந்த வீடியோவை சந்தீப் பிஷ்ட் என்ற ட்விட்டர்வாசி பகிர, இது வைரலானது. ட்விட்டர்வாசிகள் பலரும் இதுகுறித்த அறிவியலைப் பகிரத் தொடங்க, இதே வித்தையை பல மேஜிக் நிபுணர்கள் செய்துகாட்டியுள்ளதாகவும் கூறி வருகின்றனர். 

இதில் ட்விட்டர்வாசி ஒருவர் இந்த வீடியோ 2019ஆம் ஆண்டு ’டிவி ஒன்’ என்ற யூட்யூப் சேனலில் ஏற்கனவே வெளியானதையும், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவுக்கு யூட்யூபில் 8 ஆயிரம் வியூஸ் இருந்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், பலரும் இதே போன்று பிறர் வித்தை காட்டிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். ஒரு வீடியோவில் பௌத்த துறவி ஒருவர் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் அமர்ந்துகொண்டிருப்பதாகக் காட்டப்படுகிறது. ஒருவர், “இதுபோன்ற செயல்கள் மிகப்பெரிய மோசடி ஆகும். பாத்திரத்திற்குள் இருக்கும் பூவிதழ்கள் எதிலும் புகை எழவில்லை; அவை கொதிக்கவில்லை” என்று சுட்டிக் காட்டுகிறார். 

மற்றொரு ட்விட்டர்வாசியான மீர் ஆபித் என்பவர், இந்த வீடியோவில் காட்டப்படும் வித்தைக்குப் பின்னுள்ள அறிவியலை விளக்கியுள்ளார். இந்த வித்தையின் பின்னணியில் காற்று பம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர். “தண்ணீர் கொதிக்கும் போது, அது பாத்திரத்தின் அனைத்து இடங்களிலும் கொதிக்கும். இதில் முன்பக்கம் மட்டுமே கொதிக்கிறது. பின்பக்கத்தில் இருக்கும் பூக்கள் அசையாமல் அப்படியே இருக்கின்றன. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாத்திரத்தின் கீழ்ப்பகுதி அடர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கக் கூடும். இதனால் தண்ணீர் கொதிக்காமல், கீழே நெருப்பு மட்டும் எரியும்” என அவர் எழுதியுள்ளார்.

கொதிக்கும் தண்ணீரில் தவமிருக்கும் சிறுவன்.. வைரல் வீடியோவின் பின்னணி அறிவியல் என்ன?

இந்த வீடியோ வெளியான 2019ஆம் ஆண்டு, Quora தளத்தில் மைக்கேல் வான் என்பவர் இதன் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்கியுள்ளார். இதில் கார்பன் டை ஆக்சைட் சிலிண்டர் பயன்பட்டிருக்கும் என்று கூறும் அவர், சிறுவன் அமர்ந்திருக்கும் இடத்தில் கார்பன் டை ஆக்சைட் கேஸ் நிரம்பிய சிலிண்டர் இருக்கலாம். அது குளிரை உற்பத்தி செய்வதும், தண்ணீர் கொதிப்பது போல வாயுவையும் வெளிப்படுத்தும். கொதிப்பதாகக் காட்டப்படும் இடத்தில் இருப்பது சூடான நீரல்ல; அது குளிர்ந்த கார்பன் டை ஆக்சைட் வாயு” என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget