இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்; கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலி

‛என் மகன்களில் யாராவது ஒருத்தருக்கு உடல்நிலை மோசமானாலும், அது இன்னொருவனை பாதிக்கும், உயிரிழப்பும் அதே மாதிரி நடக்கும்னு நாங்க நினைக்கல; கொரியாவிற்கு செல்ல வேண்டும், எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அவங்களோட இறுதி ஆசையா இருந்துச்சு " என கண்ணீர் வடிக்கிறார்கள் பெற்றோர்.

FOLLOW US: 
தினமும் வெளியாகும் கொரோனா மரணங்கள் குறித்தான செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தொடரும் இளம் வயதினரின் மரணங்கள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் வசிக்கும் கிரிகோரி என்பவரின் 24 வயதான இரட்டை மகன்கள்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்; கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலி

ஜோஃப்ரெட் வர்கீஸ், ரால்ஃபிரட் ஜார்ஜ்  என்ற இரட்டை பொறியியல் பட்டதாரிகள், ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக  பணிபுரிந்து வந்துள்ளனர். கொரோனா சூழல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிந்த இருவருக்கும் கடந்த மாதம் காய்ச்சல் இருந்ததன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட  அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் இருவருக்கும்  நெகட்டிவ் என வந்தாலும் , மூச்சு விடுவதில் சிரமம் தொடரவே அவர்களை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.  பொதுப்பிரிவில் இருந்த அவர்களுக்கு ஐசியூ பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மே 13 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஜோஃப்ரெட்  உயிழந்தார். ஒட்டிப்பிறந்த சகோதரனின் நிலையை ரால்ஃபிரட்டிற்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளனர் பெற்றோர்.   எனினும்   ரால்ஃபிரட் தனது அம்மாவிற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு , தான் மீண்டு வருவதாக கூறி தனது சகோதரனின் நிலைக்குறித்து கேட்டுள்ளார், அவர்கள் "ஜோஃப்ரெட்  நன்றாக இருக்கிறார் " என கூறியதும் " பொய் சொல்லாதீங்கம்மா" என்ற பதிலை  தனது தளதளத்த குரலில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்; கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலி

ஜோஃப்ரெட் உயிரழந்த 1 மணி நேரத்திற்கு பிறகு  ரால்ஃபிரட்டும் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இருவரும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அவர்களது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்து பகிர்ந்து கொண்ட கிராக‌ரி " என் மகன்கள்ல யாராவது ஒருத்தருக்கு உடல்நிலை மோசமானாலும், அது இன்னொருவனை பாதிக்கும், ஆனா இப்படி உயிழப்பு வரை போகும்னு நாங்க நினைக்கல, கொரியாவிற்கு செல்ல வேண்டும், எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அவங்களோட இறுதி ஆசையா இருந்துச்சு " என்கிறார் கண்ணீர் மல்க. கிராகரிக்கு மற்றொரு மகன் உள்ள நிலையில் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு குடும்பத்தில் இரட்டை குழந்தையாய் பிறந்த இரு மகன்களை இழந்த அந்த பெற்றோர், தற்போது எஞ்சியிருக்கும் மகனையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க போராடி வருகின்றனர். இழப்பு பெரிது என்பதால் அவர்களை தேற்ற முடியாமல் உறவினர்களும் நொந்து போயுள்ளனர்.  இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ இந்த கொடூர கொரோனா. 

Tags: Corona twins death corona twins corona ovid brothers death corona

தொடர்புடைய செய்திகள்

India corona cases today: ஒரே நாளில் 97 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

India corona cases today: ஒரே நாளில் 97 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

‛கோவாக்சின் ஒன்னு... கோவிஷீல்ட் ஒன்னு...’ ஒரே நேரத்தில் பாட்டிக்கு ‛காக்டெய்ல்’ ஊசி போட்ட நர்ஸ்!

‛கோவாக்சின் ஒன்னு... கோவிஷீல்ட் ஒன்னு...’ ஒரே நேரத்தில் பாட்டிக்கு ‛காக்டெய்ல்’  ஊசி போட்ட நர்ஸ்!

‛தொழிற்சாலையே தொடங்கிட்டீங்களா...’ போலி ரெம்டெசிவர் தயாரித்த கும்பல் கூண்டோடு கைது!

‛தொழிற்சாலையே தொடங்கிட்டீங்களா...’ போலி ரெம்டெசிவர் தயாரித்த கும்பல் கூண்டோடு கைது!

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

டாப் நியூஸ்

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Jagame Thandhiram | கலவை விமர்சனங்களுடன் இணையத்தில் ஜகமே தந்திரம்

Jagame Thandhiram | கலவை விமர்சனங்களுடன் இணையத்தில் ஜகமே தந்திரம்

’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்