Modi - kamala harris Tête-à-tête | அமெரிக்க துணை அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு : தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய 10 விஷயங்கள் என்ன?
இந்த முறைசாரா சந்திப்பில் தங்களது இருதரப்பில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் இருநாட்டு தலைவர்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி முறைசாரா முறையில் (Tête-à-tête) சந்தித்து பேசினார். இந்த, புகைப்படத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொள்ளும் அதிகாரிகள் மட்டத்திலான இன்று மதியம் நடைபெறுகிறது.
இந்த முறைசாரா சந்திப்பில் தங்களது இருதரப்பில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் இருநாட்டு தலைவர்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.
"Tête-à-tête between PM Narendra Modi and US Vice President Kamala Harris before commencing delegation-level talks. This is their first in-person meeting," tweet MEA spokesperson Arindam Bagchi pic.twitter.com/0DVP9Sayww
— ANI (@ANI) September 23, 2021
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 22ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அமெரிக்க பயணம் மேற்கொண்டார். வாஷிங்க்டனில் நேற்று ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி திரு மார்க் விட்மர், குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோன், அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
நரேந்திர மோடி - கமலா ஹாரிஸ் கூட்டறிக்கை:
இந்நிலையில், இன்று மதியம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆராய அதிகாரிகள் மட்டத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அந்த சந்திப்புக்கு முன்னதாக, இருவரும் இன்று காலை முறைசாரா முறையில் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
- அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ்- க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, " உங்களது வெற்றி புதிய வரலாறு படைக்கும். அனைத்து இந்திய- அமெரிக்கர்களுக்கும் மட்டற்ற பெருமையைத் தருகிறது. உங்கள் ஆதரவு மற்றும் தலைமையில் இந்திய- அமெரிக்க நாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்றுபூர்வ பிணைப்புகள் உள்ளதை பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவும்,அமெரிக்காவும் இயற்கையான பங்குதாரர்கள் என்றும் தெரிவித்தார்.
- கோவிட்-19 போன்ற நோய்த் தாக்குதல்களைத் தடுப்பது, கண்டறிவது, சிகிச்சை அளிப்பது ஆகிய சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நோய்த் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த விரைந்து செயல்படுவது ஆகிய முயற்சிகளை தொடர்வது என பிரதமர் மோடியும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் உறுதியளித்தனர்
- எந்த வழியிலும் தீவிரவாதிகளை பயன்படுத்துவதற்கும், அனைத்து வடிவிலான எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கும் கடும் கண்டனத்தை பிரதமர் மோடியும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் பதிவுசெய்தனர். தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த நிலப்பகுதியையும் பயன்படுத்துவதில்லை என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று கமலா ஹாரிஸ் வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான கடல்வழி பயணம், கடலுக்கு மேலே விமானத்தை இயக்குவது மற்றும் கடல் பகுதியை மற்ற சட்டப்பூர்வ வழிகளில் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு ஆதரவு அளித்தனர்.
- பருவநிலை மற்றும் சுத்தமான எரிசக்தி கொள்கையில் கூட்டாக செயல்படுவது குறித்து பேசிய பிரதமர் மோடி, நாட்டில் ஹைட்ரஜன் திட்டத்தை உருவாக்க, தேசிய ஹைட்ரஜன் திட்டம் அறிவிக்கப்பட்டதையும் எடுத்துரைத்தார்.
- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் செயல்முறை சார்ந்த ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடியும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் பிராந்திய அளவில், உலகளவில் இதன் தாக்கங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
- கூடிய விரைவில் இந்தியா வர வேண்டும் என துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
- முதல் முறையாக நேரடியாக நடைபெறும் நான்கு நாடுகளின் (குவாட்) தலைவர்களின் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா ஆகியோருடன் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார்.