திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை காலியா? பரவிய தவறான தகவல்.. நடந்தது என்ன?
திருப்பதிக்குச் செல்லும் பாதையில் அண்மையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துத் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், பணியிட விவரம் மற்றும் அதற்கான துண்டுப்பிரசுரம் ஆகியன சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைப்பார்த்த பலர் தேவஸ்தான நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு விசாரிக்கத் தொடங்கினர் .இதையடுத்து இந்தத் தகவல் தவறு என்றும் இதனைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான கமிட்டி எச்சரித்துள்ளது.
முன்னதாக திருப்பதிக்குச் செல்லும் பாதையில் அண்மையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துத் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என தேவஸ்தானம் கூறியிருந்த நிலையில் மீண்டும் முன்பதிவை இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்வாகம் தொடங்கியது.
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரியது திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினசரியும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். உண்டியல் காணிக்கை தினசரியும் கோடிக்கணக்கில் வசூலாகும். கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது.
நவ., 18ம் - டிச., 10 வரையிலாத தேதிகளுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்த்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மழையால் தரிசனம் செய்யமுடியாதவர்களுக்கான வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது.
எனவே பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தரிசன தேதியை மாற்றி திருமலை பயணத்தை முடிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.பூலோக வைகுண்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, நம்பெருமாள் சௌரிக் கொண்டை, ரத்தினகிளி, ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு திருவாபரணங்கள் தரித்து மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். டிசம்பர் மாதத்தில் கார்த்திகை மாதம் பாதி நாட்களும் மார்கழி மாதம் பாதி நாட்களும் இணைந்து வருகிறது. இந்த மாதங்களில் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தாலும் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் புக் செய்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே திருமலை திருப்பதி டைரி, காலண்டர்கள் வாங்குவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டி வருவார்கள். இந்த ஆண்டு டைரி, காலண்டர் ஆன்லைன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in இணைய தள பக்கத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.