விரைவில் செய்திகளுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்...! குஷியில் செய்தி சேனல்கள்...!
டி.ஆர்.பி. சேவைகளைப் பயன்படுத்துவதற்காக நேயர்களின் தரவு திறன்களை மேம்படுத்துவதை பரிசீலிக்க, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மக்களுக்கு மத்தியில் கிடைக்கும் வரவேற்பை நிர்ணயிக்கும் தரவரிசையே டி.ஆர்.பி. ஆகும். மத்திய அரசின் பி.ஐ.பி.யில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ டி.ஆர்.பி. அறிக்கை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. இந்த பரிந்துரையின்படி, ஒளிபரப்பு நேயர்கள், ஆராய்ச்சி கவுன்சில், அதன் செயல்முறைகள், நெறிமுறைகள், மேற்பார்வை முறை மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
வாரியத்தை மாற்றியமைப்பது மற்றும் தனி உறுப்பினர்களை சேர்க்க தொழில்நுட்ப குழுவை அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தொடங்கியுள்ளது. ஒரு நிரந்தர மேற்பார்வை குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. தரவுக்கான அணுகல் நெறிமுறைகள் புதுப்பிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஒளிரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு, புதிய திட்டங்களை விளக்குவதற்கு சம்பந்தப்பட்ட தொகுதிகளை அணுகி, புதிய நெறிமுறைகளின்படி தரமதிப்பீடு வெளியீட்டை தொடங்கத் தயாராக இருப்பதாக ஒளிரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கூறியவற்றை கவனத்தில் கொண்டு செய்தி மதிப்பீடுகளை உடனடியாக வெளியிடுமாறும், உண்மையான போக்குகளின் நியாயமான மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்காக, மாதாந்திர முறையில் கடந்த மூன்று மாத தரவுகளை வெளியிடுமாறு ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட முறையின்படி, செய்திகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின் அறிக்கயைானது “நாஜ்கு வார சுழற்சி சராசரி கருத்தாக்கத்தில்” இருக்க வேண்டும்.
டிராய் மற்றும் டி.ஆர்.பி. கமிட்டி அறிக்கயைில் பரிந்துரைக்கப்பட்டபடி, டி.ஆர்.பி. சேவைகளைப் பயன்படுத்துவதற்காக நேயர்களின் தரவு திறன்களை மேம்படுத்துவதை பரிசீலிக்க, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு ஒன்றை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செய்தி நிறுவனங்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். செய்திகளை விரைந்து தருவதிலும், வெகுஜனங்களை அதிகளவில் சென்று சேரும் செய்திகளை தருவதிலும் இந்த டி.ஆர்.பி. முறை செய்தி நிறுவனங்களுக்கு ஊக்கத்தை தரும் என்றும் செய்தி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க : UP Elections 2022: உத்தரபிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்!
மேலும் படிக்க : 55 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!’ - அறிவிப்பை வெளியிட்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்