மேலும் அறிய

UP Elections 2022: உத்தரபிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்!

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளரை சமாஜ்வாதி கூட்டணி அறிவித்தது. தேசியவாத காங்கிரசின் உத்தரபிரதேச தலைவர் கே.கே.சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியான யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க.விற்கும், எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி கடுமையாக நிலவி வருகிறது.


UP Elections 2022: உத்தரபிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்!

மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 350 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிட உள்ளனர். சமாஜ்வாதி கட்சியினருடன் என்.சி.பி. எனப்படும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு கட்சி தலைவர்கள் இடையே இன்று நடைபெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதன்படி, உத்தரபிரதேச தேர்தலுக்கான சமாஜ்வாதி கட்சி கூட்டணியின் முதல் வேட்பாளராக கே.கே.சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தேசியவாத காங்கிரசின் தலைவராக பதவி வகிப்பவர்தான் கே.கே.சர்மா. இவர் வரும் சட்டசபை தேர்தலில் பூலாந்த்சரில் உள்ள அனுப்சர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதுதொடர்பாக, அகிலேஷ் யாதவ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 2022ல் மாற்றம் என்றும் பதிவிட்டுள்ளார்.


UP Elections 2022: உத்தரபிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்!

முன்னதாக, இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக லக்னோவில் சமாஜ்வாதி கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் தளம், சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜன்வாடி கட்சி, பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி லோகியா ஆகிய கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். சுமார் 3 மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

சமாஜ்வாதி  350 தொகுதிகளிலும், ராஷ்ட்ரியா லோக் தளம் 36 இடங்களிலும், சுகெல்தேவ் பாரதிய சமாஜ்கட்சி 10 இடங்களிலும், பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி 10 இடங்ளிலும் மற்ற இடங்ளில் பிற கூட்டணி கட்சியினரும் போட்டியிட உள்ளனர்.


UP Elections 2022: உத்தரபிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்!

நாட்டிலே மிகப்பெரிய சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக சக்தி கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்வதால் எப்போதுமே உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  உத்தரபிரதேசம் மட்டுமின்றி சண்டிகர், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
Embed widget