மேலும் அறிய

Watch Video : கேரம் போர்டில் நாங்க கில்லி.. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் வைரல் வீடியோ..!

சமீப காலமாக, கால்பந்து விளையாடியும், தேனீர் போட்டும் இவர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

மேங்குவங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமூல் காங்கிரஸின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மஹுவா மொய்த்ரா.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஆளும் பாஜகவை தரவுகள் மூலம் திணறடிப்பவர் மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் இவர் ஆற்றும் உரைகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளை உருவாக்கி பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.

சமீப காலமாக, கால்பந்து விளையாடியும், தேனீர் போட்டும் இவர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அது பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில், கேரம் போர்டில் தன்னுடைய தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

தன்னுடைய கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியில் கேரம் போர்டு விளையாடுவது போன்ற வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். பச்சை வண்ண ஸ்ட்ரைக்கரை பயன்படுத்தி அவர் பொறுமையாக காய்களை குறி பார்ப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இறுதியாக, அவர் ஒரு காயினையும் போட்டு விடுகிறார். 

இரண்டாவது காயினை அவர் போட முயற்சிக்கும் போது அருகில் இருப்பவர்கள் அவரை உற்சாகப்படுத்துகின்றனர். ஆனால், இந்த முறை அவரால் காயினை அடிக்க முடியவில்லை. 

இதையடுத்து, அவருடன் கேரம் போர்டு விளையாடும் நபருக்கு ஸ்ட்ரைக்கர் சென்றுவிடுகிறது. இதை, வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அவர், வெயிலுக்கு மத்தியில் கிராமத்தில் சிறிது நேரம் கேரம் விளையாடியதாக பதிவிட்டுள்ளார்.

நேற்று பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு ஏற்கனவே 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும் மூவாயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பல பயனர்கள் இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளனர்.

சமீபத்தில், டீக்கடையில் டீ போட்டு கொடுக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கித்தில் பகிர்ந்த  மஹுவா மொய்த்ரா பிரதமர் மோடியை கிண்டலாக சீண்டினார்.

அந்த வீடியோவில், திரிணாமுல் கட்சியின் எம்.பி ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்ப்பதைக் காணலாம்,  அப்போது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடுகிறது. 

"டீ தயாரிப்பதை முயற்சித்தேன்... அது என்னை எங்கு அழைத்துச் செல்லும் என்று யாருக்குத் தெரியும் :-)," என்று திரிணாமுல் எம்.பி தனது பதிவில் கேப்ஷனாக இட்டுள்ளார்.

 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி  மஹுவா மொய்த்ரா தனது வீடியோவுக்கு இட்டுள்ள கேப்ஷன்  "சாய்வாலா " என்று அழைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியைக் குறிப்பதாக சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டும், மஹுவா மொய்த்ராவின் பதிவுக்கு கமெண்ட் செய்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget