மேலும் அறிய

Train Ticket Offers: இனி ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. பயணிகளுக்கு ஹேப்பி செய்தி; பெறுவது எப்படி?

ரயில் பயணங்களில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. ஆப் மூலம் புக் செய்தால் செம ஆஃபர்!

ரயில் பயணங்களில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் ஒன் செயலி மூலம் புக் செய்து, ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்தினால் இந்த தள்ளுபடி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய ரயில்வே, தினசரி ரயில்களில் பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு ஒரு சூப்பரான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி முன்பதிவில்லா டிக்கெட்டுகளை செயலி மூலமாக புக் செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கம். இதனால் பீக் அவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நெரிசல் மிக அதிகமாக இருக்கும்.

ரயில்வே துறை நடவடிக்கை

இந்தக் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் ரயில்வே துறை தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே, ரயில்வேயின் மொபைல் செயலியான ரயில் ஒன் (RailOne) மூலமாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகளுக்கு இந்த 3% சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜூலை 14ஆம் தேதி வரை மட்டுமே இந்த தள்ளுபடி அளிக்கப்படும்.

சலுகையைப் பெறுவது எப்படி?

பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். கட்டணத்தைச் செலுத்தும்போது வாலட், யுபிஐ நெட் பேங்கிங், டெபிட்/ கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்திப் பணத்தைச் செலுத்தினால், உடனடியாக 3% தள்ளுபடி கிடைக்கும். மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.

என்ன பயன்?

ரயில்வேயின் இந்தத் திட்டம், தினசரி வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் பயணிகள் இனி நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, ஆப் மூலமாகவே டிக்கெட் எடுத்து இந்தத் தள்ளுபடிச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget