Watch Video: தண்டவாளத்தில் படுத்து ஃபோன் பேசிய சிறுமி... வேகமாக வந்த ரயில்.. அதிர்ச்சி வீடியோ
ரயில் தண்டவாளத்தில் ரயில் செல்லும்போது, சிறுமி ஒருவர் படுத்துக்கிடந்து போன் பேசிக்கொண்டிருந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில் தண்டவாளத்தில் ரயில் செல்லும் போது, சிறுமி ஒருவர் படுத்துக்கிடந்து ஃபோன் பேசிக்கொண்டிருந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரயில் நிலையங்களில் அலட்சியத்தாலும், எதிர்பாராமலும் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்கள் ஒரு ரகம் என்றால், தற்கொலைக்கு முயன்று உயிரை விடும் நபர்கள் இன்னொரு ரகம். இதற்கிடையில், ரயில்வே ஊழியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, சிலரை காப்பாற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகும். இப்படியான கோரமுகத்தை கொண்ட தண்டவாளத்தை இங்கு ஒரு சிறுமி அணுகியிருக்கும் விதம் கொஞ்சம் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்ன என்று கேட்கிறீர்களா..? இங்கு தண்டாவளாத்தில் படுத்திருக்கும் ஒரு சிறுமி அந்த இடத்தை போனில் சகஜமாக பேசும் ஒரு இடமாக மாற்றிவிட்டார்.
இந்த வீடியோவை ஐபிஎஸ் ஆபிசரான டிபன்ஷு கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है 🤦🏻♂️ pic.twitter.com/H4ejmzyVak
— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022
அந்தப்பதிவில், “ தொலைபேசியில் புரளி பேசுவது மிகவும் முக்கியமானதா?” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டு இருக்கும் வீடியோவில், தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ரயில் சென்ற உடன், அங்கு சிறுமி ஒருவர் படுத்து கிடக்கிறார். அவரது தலை துப்பட்டாவால் மூடப்பட்டிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்க்கும்போது, அவர் போன் பேசிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது. தொடர்ந்து போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் அசால்ட்டாக நடந்து வருகிறார்.” இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பதிவிட்ட கமெண்ட்டுகள்:
Is that real 😳
— Surender Mehra IFS (@surenmehra) April 12, 2022
6G mobile service checking 😎😃😃
— Kapil🐦 (@Kapil_Bundii) April 12, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















