Viral Video:மைக்கேல் ஜான்சனின் மூன் வாக் ஸ்டெப்பை ஆடி அசத்திய போக்குவரத்துக் காவலர்!
இந்தூரைச் சேர்ந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் மைக்கேல் ஜான்சனின் புகழ்பெற்ற ’டேஞ்சரஸ்’ பாடலுக்கு ஆடியபடி போக்குவரத்தை இயக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
ஊர், மொழி, நாடு கடந்து உலகம் முழுவதும் தனக்கென நிரந்தர இடம் பிடித்து எல்லையற்ற அன்பை தன் இறப்புக்கு பின்பும் சம்பாதித்து வருபவர் பிரபல பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜான்சன்.
குறிப்பாக இசையை பெருமளவு கொண்டாடும் இந்தியாவில், மைக்கேல் ஜான்சனுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் முன்னதாக இந்தூரைச் சேர்ந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் மைக்கேல் ஜான்சனின் புகழ்பெற்ற ’டேஞ்சரஸ்’ பாடலுக்கு ஆடியபடி போக்குவரத்தை இயக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
View this post on Instagram
மைக்கேல் ஜான்சனின் ரசிகரான ராஜ்னீத் சிங் எனும் இந்தப் போக்குவரத்துக் காவலர் கடந்த
10 ஆண்டுகளாக இவ்வாறு எம்ஜேயின் ஸ்டெப்களை ஆடியபடி போக்குவரத்தை இயக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முன்னதாக இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
மேலும், இவர் மைக்கேல் ஜான்சனின் பிரபல ஸ்டெப்பான மூன் வாக்கை பரபரப்பான போக்குவரத்து நெரிசம் மிக்க சாலையில் மத்தியில் ஆடி அசத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.
மேலும் படிக்க: நாட்டை உலுக்கிய நிகழ்வு : கன்டெய்னரில் சடலமாக மீட்கப்பட்ட 46 அகதிகளின் உடல்.. இருவர் மீது வழக்குப்பதிவு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்