Morning Headlines: காங்கிரஸில் இன்று இணைகிறாரா ஒய்எஸ் ஷர்மிளா? இன்று கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- தென் மாநில தேர்தல் பொறுப்பாளராக வாய்ப்பு..! காங்கிரஸில் இன்று இணைகிறாரா ஒய்எஸ் ஷர்மிளா..?
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று காலை காங்கிரஸில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைய இருக்கிறார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஷர்மிளா டெல்லி விமான நிலையத்திற்கு வந்தவுடன் நிருபர்கள், ”காங்கிரஸில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு, 'ஆம், அது போலதான் இருக்கிறது' என்று கூறினார். மேலும் படிக்க..
- இன்று கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? - எச்சரிக்கும் அமைச்சர்கள், காரணம் என்ன?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், இன்று அமலாக்கத்துறை சோதனை செய்ய வாய்ப்புள்ளதாக அமைச்சர்கள் அதிஷி மற்றும் பரத்வாஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என, அவரது அமைச்சரவையை சேர்ந்த இருவரே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதிஷி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வியாழன்று காலை அமலாக்கத்துறை சோதனை செய்யப்பட உள்ளது. கைது செய்ய வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..
- கடுங்குளிரிலும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட பாதுகாப்பு வீராங்கனைகள் - டெல்லியில் அசத்தல்!
ஆண்டுதோறும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடக்கும். கம்பீரமாக நடைபெறும் இந்த அணிவகுப்பை காண்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், பொதுமக்களும் குவிவார்கள். இந்த நிலையில், முப்படைகளும் குடியரசு தின அணிவகுப்பிற்காக ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படை வீராங்கனைகள் கார்டவ்யா பாதையில் ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் படிக்க..
- கையில் இன்னும் ரூ.2000 நோட்டு உள்ளதா? எங்கெல்லாம் அதனை மாற்றலாம்? தெரிஞ்சுக்கோங்க
ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த 2000 ரூபாய் நோட்டுகளை, தற்போது சென்னை உட்பட நாடு முழுவதும் 19 இடங்களில் மட்டுமே மாற்ற முடியும். 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அறிவித்தது. அதைதொடர்ந்து, பொதுமக்கள் தங்களது கைகளில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி தங்களது கணக்கில் வரவு வைக்க கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் படிக்க..
- அதானி - ஹிண்டன்பெர்க் வழக்கில் தீர்ப்பு - கிடுகிடுவென உயர்ந்த அதானி குழும பங்குகளின் விலை.. விவரம் இதோ
ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகளின் மதிப்பு 3 முதல் 18 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதனால், இந்திய பங்குச்சந்தையில் அந்த குழுமம் கடும் சரிவை கண்டது. அக்குழமத்தில் உள்ள நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு சரிய, பங்குகளின் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் படிக்க..